சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தபோது, மேற்கண்டவாறு பேட்டியளித்து, தமிழினத்தவர் மனங்களில் நிலையானதொரு இடத்தைப் பெற்றுள்ளார்.
நடுவணரசில் பொறுப்பான உயர் பதவி வகித்தவர் எவரும் தம் இனத்தைப் பெருமைப்படுத்திப் பேசியதில்லை[குறுகிய மனத்தவர் என்னும் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோம் என்னும் அச்சம் காரணம்].
விதிவிலக்காக.....
“கன்னடரும் குஜராத்தியரும் பிரதமர் ஆகிறார்கள். தமிழர் ஒருவரும் நிச்சயம் பிரதமர் ஆவார்” என்று பேட்டியளித்த குடியரசுத் துணைத் தலைவரின் துணிச்சலைப் பாராட்டுவதோடு, இவருக்குள்ள இனப்பற்றை எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழினப் பற்றுக்கொண்ட இவரே அடுத்த இந்தியப் பிரதமராகவும் ஆக வேண்டும் என்பது நம் பெருவிருப்பம்.
இன்றைய இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரும், நாளைய இந்தியப் பிரதமரும் ஆன சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.