ஓரிரு நாட்களுக்கு முன்பு, உலகம் போற்றும் குரங்குக் கடவுளால்[ஆஞ்சநேயர்] பிரபலமான எங்கள் ஊரில் உள்ள, கண்ட கண்ட சுவர்களில் எல்லாம் மேற்கண்ட விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. வம்புதும்புகளில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க[ஹி... ஹி... ஹி!!!], சம்பந்தப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் சொற்றொடர்களை[+ தேவையற்ற கூடுதல் விவரங்கள்] நீக்கியுள்ளேன்.
இது ஆண்களுக்கான[+2ஆம் திருமணம்] விளம்பரம்.
கணவரை இழந்த பெண்கள் தங்களின் இரண்டாம் திருமணத்திற்காக ‘ஆண்கள் தேவை’ என்று விளம்பரம் செய்யும் நாளும் வருமா?[அந்த நாள்தானே, ஆண்களுக்கு நிகரான ‘சமத்துவத்தை’ப் பெண்கள் முழுமையாகப் பெற்றிடும் நாளாக இருக்கமுடியும்?]
வந்தால்.....
நாடெங்கும் கீழ்க்காண்பது போன்ற விளம்பரங்கள் தென்படக்கூடும்.


