அறிவியல் துறையின் முன்னோடிகளாக இருந்த ஆங்கிலேயர்களின் ‘ஆதிக்க வெறி’தான் உலகின் பெரும்பாலான நாடுகளைக் கைப்பற்றி ஆள வழிவகுத்தது.
ஆதிக்க வெறி இருந்த அளவுக்குத் தங்களின் மொழியான ஆங்கிலத்தை, அடக்கி ஆண்ட மக்கள் மீது திணிக்கும் வெறி அவர்களுக்கு இருந்ததில்லை.
அறிவியல் அறிவை அனைவரும் பெற்றிட வேண்டும் என்னும் எண்ணத்துடன்தான், கல்வி நிறுவனங்களில் அதைப் பாட மொழியாக ஆக்கினார்கள்; அறிவியல் கற்கும் ஆர்வத்தில் மக்களும் அதைக் கற்றார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெற்றாலும், விடுதலைக்குப் பிறகு நம்மை[+ஒட்டுமொத்த இந்தியாவையும்] ஆளுகிறவர்கள் ‘இந்தி’யர்கள்தான்[இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு உயர் பதவிகள் தரப்பட்டாலும், அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் அவர்கள்> குஜராத்திகளான மோடி, அமித்ஷா போன்றவர்கள் பதவிக்காக இந்தியைத் தங்களின் தகப்பன் மொழியாக ஏற்றுக்கொண்டவர்கள்].
அனைத்து அதிகாரங்களும் தங்களுக்கு இருக்கிறது என்னும் ஆணவத்தில்தான், இந்தியைத் தவிரப் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கும் வேலையை அவ்வப்போது அவர்கள் முடுக்கிவிடுகிறார்கள். இதன் மூலம் பிற மொழிகளைப் பலவீனப்படுத்தி அவற்றை முற்றிலுமாய் அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கீழ்க்காண்பவை அண்மைக் காலத் திணிப்புகளில் இடம்பெற்றவை:
[நன்றி: இந்து தமிழ்]
