பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வெள்ளி, 13 நவம்பர், 2026
‘தில்’ ஜெயக்குமாருக்கு[அதிமுக] ஒரு திகிலூட்டும் கேள்வி!
‘அதிமுக’ கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரான ஜெயக்குமார் அவர்களே,
ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தியனுப்பி அகில இந்தியாவின் பேசுபொருளான ‘அருள் விக்னேஷ்’ஐ “நானாக இருந்தால் போட்டுத்தள்ளியிருப்பேன்[என்கவுன்டர்]” என்ற உங்களின் அதிரடியான ஆவேசப் பேச்சு நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பை மட்டுமல்ல, அந்தச் ச.ம.உறுப்பினன் மீதான மக்களின் கோபத்தையும் அதிகரித்திருக்கிறது; அந்த நபர் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்றே அவர்கள் விரும்புவார்கள்.
அதனால், அந்த இழிபிறவியும், ஆதரவளிக்கும் அல்பங்களும், ஆட்சியர் மீதே அவதூறுச் செய்திகளைப் பரப்பத் தொடங்கியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ‘ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தியை அனுப்பியதே ஜெயக்குமார்தான்’ என்பது போன்ற பொய்ச் செய்தியைப் பரவச் செய்து, அந்தத் ‘தவெக’காரன் மீதான குற்றத்தை நீர்த்துப்போகச் செய்யும் தீவிர முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பது உறுதி.
ஜெயக்குமார் அவர்களே, நீங்கள் எவ்வகையிலான ‘தற்காப்பு’ முறைகளை மேற்கொள்ள உள்ளீர்கள்?
சிந்தியுங்கள் ஜெயக்குமார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)