//தமிழக எம்.பி-க்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தார். இது மக்களை அவமதிக்கும் செயல் என்று சசி தரூர் கூறினார். உங்கள் கருத்து என்ன?//
மேற்கண்ட 'Quora'இன் கேள்விக்கான என் பதில்:
பின்தொடர்
இது, இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் அடாவடித்தனமும்கூட.
தொடர்புக்கு ஆங்கிலம் மட்டுமே போதும். இதனாலெல்லாம் இனியொரு முறை நாம் ஆங்கிலேயனுக்கு அடிமை ஆகிவிட மாட்டோம்.
வங்கிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் என்று எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் இந்தியைத் திணித்துவிட்டார்கள்.
இந்தியை மட்டுமே இந்தியாவின் மொழியாக்கி ஏனைய மொழிகளை அழிக்கும் வேலையை வெறித்தனமாகச் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் போலப் பிற மாநிலங்களும் இந்தியை மிகக் கடுமையாக எதிர்க்காவிட்டால், இந்த வெறியர்களின் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.
இந்தி பேசாத மாநிலத்தவரின் ஒருங்கிணைந்த போராட்டம் உடனடித் தேவை.
அதன் முதல் கட்டமாக, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து இந்தியை அறவே நீக்க வேண்டும்[அவர்கள் மாநிலத்தில் அது கோலோச்சுவதைத் தடுப்பாரில்லை].
இம்மாதிரியான கருத்துகள் மிக விரைவாகப் பரப்பப்பட்டு, அதை இந்தி பேசாத மாநில மக்களும் அரசியல் தலைவர்களும் உணர்வது மிக மிக மிக முக்கியம்.
சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயனுக்கு அடிமைகளாக இருந்த நாம் இனி காலமெல்லாம் இந்திக்காரனுக்கு அடிமைகளாக வாழப்போகிறோமா?
* * * * *