வெள்ளி, 15 ஏப்ரல், 2016

TRANSGRESSIVE எழுத்தாளரா ‘வயாகரா’ புகழ் சாருநிவேதிதா?!


குமுதம் இதழில் ‘வயாகரா’ மேட்டரை எழுதப்போகும் சாரு நிவேதிதாவை TRANSGRESSIVE எழுத்தாளர் என்கிறது குமுதம். அதற்கான விளக்கத்தைக் கீழ்க்காணுமாறு[குமுதம், 20.04.2016] தந்திருக்கிறார் வயாகரா புகழ் சாரு.

‘எதைப் பற்றிப் பேசக்கூடாது என்கிறார்களோ, எதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்கிறார்களோ அதைப் பற்றி எழுதுவதுதான் டிரான்ஸ்கிரசிவ்.’

தமிழில் ‘அத்து மீறுதல்.’

“வயாகரா என்றால் கெட்ட வார்த்தை,  அதைப் பற்றி[வயாகரா மேட்டர்] எழுதக் கூடாது என்கிறார்கள். நான் எழுதப்போகிறேன். அதனால், நான் ஒரு TRANSGRESSIVE எழுத்தாளர்” என்று சொல்கிறார் நிவேதிதா சாரு.
சாரு அவர்களே, 

வயாகரா கெட்ட வார்த்தை என்றோ, பாலுணர்வு பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தவறு என்றோ இப்போதெல்லாம் யாருமே சொல்வதில்லை[தமிழிலேயே நல்ல நூல்கள் உள்ளன. மிகப் பெரும்பாலோர்க்கு, அவற்றை வாங்கிப் படிக்கும் மனப் பக்குவமும் சூழலும் இங்கு இல்லை என்பதே உண்மை]; அப்படிச் சொல்லப்படுதாகச் சொல்கிறவர் நீர்[உடந்தை: குமுதம் ஆசிரியர் குழு] மட்டுமே.

‘ஜீரோ டிகிரி’ எழுதிப் பிரபலமான உம்மைக் குமுதம் எழுதவைப்பதே இதழின் விற்பனையைக் கூட்டத்தான். உமக்குத் தெரிந்த, தெரியாத[புருடா] கெட்டதுகளையெல்லாம் எழுதினால்தான் அது சாத்தியமாகும். 

எழுதும். எத்தனை வாரம் வேண்டுமானாலும் எழுதும். நான் ஒரு ‘டிரான்ஸ்கிரசிவ் எழுத்தாளர்’ என்ற ‘பில்டப்’ மட்டும் வேண்டாம்.

கனவு, கேப்பசினோ[cappuccino -  ஒரு வகை பானம்?] பற்றியெல்லாம் எழுதவிருக்கும் நீர், ‘கொஞ்சம் சாட்டிங்’ பற்றியும் எழுதவிருக்கிறீர். கொஞ்சமென்ன, நிறைய...நிறைய...நிறையவே எழுதும். ஆனால்.....

ஓர் அப்பாவிப் பெண்ணுடன் சாட்டிங் செய்ததால் உம்முடை மானம் மரியாதையெல்லாம் அந்தரத்தில் பறந்ததே, அதை மட்டும் மறந்துவிட வேண்டாம்.

‘நடமாடும் வயாகரா’ சாரு நிவேதிதா அவர்களே, 

எழுதும். குமுதம் “போதும்” என்று சொல்லும்வரை எழுதும். அதன் மூலமாக, உமது புகழ் உலகெங்கும் பரவவும், குமுதத்தின் விற்பனை மில்லியன் கணக்கில் உயரவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
===============================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக