மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Monday, April 18, 2016

‘தலித்’ அல்லாதோர் சிந்தனைக்கு..........


தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் 83 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லக்கண்ணு அவர்கள். இது இன்றைய நாளிதழ்ச்[தி இந்து, ஏப்ரல் 18, 2016] செய்தி.

[83 பேர்களில் தலித் இளைஞர்கள் எத்தனை பேர், ஆதிக்க சாதிப் பெண்கள் எத்தனை பேர் என்பதை அறிய இயலவில்லை. தலித் இஞைர்களே அதிகம் என்பது   என் எண்ணம். தோராயமாக 50 பேர் எனக் கொள்வோம்]. 

‘ஜாதி மாறித் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்க அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்  அவர்.
அரசு, தனிச்சட்டம் கொண்டுவந்து, ஜாதி ஆணவக் கொலைகள் முற்றிலுமாய்த் தடுத்து நிறுத்தப்படும் நிலை உருவானால்,  உயர்சாதிப் பெண்களைக் காதலித்து மணம் புரியும் தலித் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.  அதன் விளைவாக, சாதிபேதம் அற்றதொரு சமுதாய மறுமலர்ச்சிக்கான ந்த இளைஞர்களின் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

இன்றைய நிலையில், கொலையுண்ட 50 இளைஞர்களின்  பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. இவர்களை மணந்த 50 தைரியசாலிப் பெண்கள் விதவைகள் ஆனார்கள். 

இங்கு நிலவும் அதீத ஜாதிவெறியர்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, இளைஞர்கள் கலப்பு மணம் புரியாமல் இருந்திருந்தால், நன்கு படித்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவைத்திருந்த இவர்களை மணக்கும் வாய்ப்பு  50 தலித் இளம் பெண்களுக்குக் கிடத்திருக்கும். அதுவும் பறிபோனது.

ஆக, இந்தப் படுகொலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் மேல்சாதிப் பெண்கள் மட்டுமல்ல, தலித் இளம் பெண்களும்தான்.

பாடுங்கய்யா........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...”

பாடுங்க.....உரக்கப் பாடுங்க!
***********************************************************************************************************************


No comments :

Post a Comment