ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

‘நாத்திகர்’களுக்கு மிகக் கடுமையானதோர் எச்சரிக்கை!

‘மதச்சார்பற்றது’ என்று  சொல்லப்படும் இந்த மண்ணில் மதவெறியர்களால் கடவுள் மறுப்பாளர்கள் பலர்   கொல்லப்பட்ட நிலையில், மதச்சார்புள்ள வங்கதேசத்தில் இவ்வாறான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதில் ஆச்சரியப்பட  ஏதுமில்லை.


ங்கதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஏ.எப்.எம்.ரெசவுல் கரீம் சித்திக்கீ அவர்கள்; முற்போக்குச் சிந்தனையாளர்.
நேற்றைய தினம்[23.04.2016] காலை நேரத்தில், வழக்கம்போல வீட்டிலிருந்து பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும்போது, மோட்டார் பைக்கில் வந்த இருவர் இவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்[தி இந்து, ஞாயிறு, ஏப்ரல்24,2016]

இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, ‘வங்கதேசத்தில் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பியதே இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்’ என்று அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் நாத்திகக் கொள்கையுடைய அறிஞர்களும் வலைப்பூ எழுத்தாளர்கள் பலரும் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; மேலும் பலர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள்.

‘புண்ணிய பூமி’ எனப்படும் இந்தப் பாரததேசத்திலும் பகுத்தறிவாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை; தண்டிக்கப்படவும் இல்லை.

மதச்சார்புள்ளவர்களால் ஆளப்படும் இம்மாதிரி நாடுகளில் நாத்திகர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்பதை, எஞ்சியுள்ள நாத்திகக் கொள்கையாளர்கள் உணர்தல் வேண்டும். உயிர்வாழும் ஆசை இருந்தால், மூடநம்பிக்கைகளை வளர்க்கும் மதங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதை நிறுத்துதல் வேண்டும். மக்கள் எக்கேடுகெட்டால் நமக்கென்ன என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

“இல்லையில்லை. உயிர் எமக்கு ஒரு பொருட்டல்ல; அடிப்படை மதவாத சக்திகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நாங்கள் தொடர்வோம்” என்று முழக்கமிடுவார்களேயானால், அவர்களுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது.........

“உங்களின் துணிவு பெரிதும் மெச்சத்தகுந்தது. எந்தவொரு காலக்கட்டத்திலும் உயிர்விடத் தயாராய் இருக்கும் நீங்கள் கைவசம் ஒரு துப்பாக்கி அல்லது கத்தி வைத்துக்கொள்ளுங்கள்; உங்களின் உயிரைப் பறிக்க வரும் வெறியரில் சிலரையேனும், குறைந்தபட்சம் ஒருவரையேனும் போட்டுத்தள்ளிவிட்டுச் சிறை செல்லுங்கள்; தூக்குமேடை ஏறவும் தயாராக இருங்கள். எதிரிகளின் தாக்குதல் தொடருமேயானால் உங்களின் அரிய உயிரை இழக்கவும் நேரிடும்.

இந்த உங்களின் துணிச்சலான நடவடிக்கையால், உலக அளவிலுள்ள மூடர்களின் தொகையில் சிலவோ ஒன்றோ குறையும். இதுவும் பகுத்தறிவுக் கொள்கைக்கான வெற்றிதான்.”
###################################################################################







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக