நடிகர்களின் ‘கட் அவுட்டு’களுக்குப் பாலாபிஷேகம் செய்வது குற்றம் என்றால் கடவுள்களின் [கற்]சிலைகளுக்கு அதைச் செய்வதும் குற்றம்தான்.
//நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும்போதெல்லாம். ரசிகர்கள், அபிஷேகம் என்னும் பெயரில் அவருடைய ‘கட் அவுட்’களுக்கு லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் கொட்டி வீணடிக்கிறார்கள். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மணிவண்ணன் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்// என்பது நேற்றைய[31.03.2015] தினசரிகளில் வெளியாகியுள்ள குறிப்பிடத்தக்க செய்திகளில் ஒன்று.
நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
லட்சக்கணக்கான லிட்டர் பாலைக் ‘கட் அவுட்’களின் மீது கொட்டுவது குற்றம்தான் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. இது குற்றம் என்றால், தினம் தினம் கோடிக்கணக்கான லிட்டர் பாலை, பக்தியின் பெயரால் கண்ட கண்ட கடவுளரின் [கற்]சிலைகளின் மீது கொட்டி வீணடிக்கிறார்களே, அது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமல்லவா? கடவுள்களைத் திருப்திபடுத்துவதாக நினைத்துக் கணக்கு வழக்கில்லாமல் அரிய மஞ்சளையும் சந்தனத்தையும் பழ வகைகளையும் பாழாக்குகிறார்களே, இது தண்டனைக்குரிய குற்றமல்லவா?

ரசிகர்களின் செயல்பாடு முட்டாள்தனமானது என்றால் இவர்களுடையது வடிகட்டின மூடத்தனம்.
இவர்கள் கற்சிலைகளைக் கடவுள்களென நம்புகிறார்கள். அவர்கள் கட் அவுட்களையே தத்தம் தலைவர்களெனப் போற்றி வழிபடுகிறார்கள். இவர்கள் ஒரு குட்டையில் ஊறி அழுகிய மட்டைகள்.
‘பல்லாயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி வாடும் நிலையில் இம்மாதிரிப் பாலாபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மனுதாரர்.
‘கட் அவுட்’ களுக்கு மட்டுமல்ல, கடவுளர் சிலைகளுக்கும் பாலபிஷேகங்களும் இன்ன பிற அபிஷேகங்களும் செய்வது தடை செய்யப்பட வேண்டும்.
நீதி மன்றம் இதைச் செய்யுமா என்பது நமக்குத் தெரியாது; செய்ய வேண்டும் என்பது நம் மனப்பூர்வமான வேண்டுகோள்.
*****************************************************************************************************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக