தேடல்!


Mar 7, 2016

விவேகானந்தரா இப்படிச் செய்தார்?! நினைத்தாலே குமட்டுகிறது.

‘நோயுற்ற ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கோழைகளைத் தம் இரு கைகளாலும் ஏந்தி, மடமட என்று குடித்தார் சுவாமி விவெகானந்தர். இது ஒரு புனிதமான செயல் என்றும் நம்பினார்.’ 

ஆன்மிக நெறி வளர்க்கும் ஓர் எழுத்தாளர் இப்படி எழுதி வைத்திருக்கிறார். [நூல்: ‘மோட்ச சாதனம்’, ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை. முதல் பதிப்பு: நவம்பர், 2009].

இளைஞரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் விவேகானந்தர்; ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’  என்று முழங்கியதோடு வாழ்நாளெல்லாம் மக்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தவர்.

தம் சீடர்களுடனான காசி யாத்திரையின்போது, வழியில் பிச்சையெடுக்கும் தொழுநோயாளிகளைப் பார்த்து மனம் பதைத்து, அவர்களுக்கு உணவும் உடையும் மருந்தும் வாங்கித் தந்துவிட்டு வெறும் கையுடன் ஊர் திரும்பியவர் அவர்.

விவேகானந்தரின் ‘கடவுள் கொள்கை’ குழப்பம் நிறைந்ததாயினும் [வாசிப்புக்கு:http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_9.html], தம் குருவான ராமகிருஷ்ணர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் அவர். அவர் வாழ்வில் நிகழ்ந்ததாக, மேற்கண்டது போன்ற அருவருக்கத்தக்க கதைகளை உருவாக்குவதும், மக்களிடையே பரப்புவதும் மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

ஆன்மிக நெறி பரப்புவோர் சிந்திப்பார்களாக.
=============================================================================================

இணைப்பு: 14.03.2016 குங்குமம் இதழில் வெளியான ஒ.ப.கதை.

நன்றி: ‘குங்குமம்’ வார இதழ்.