//ரஷ்யாவில் நடக்கும் ‘கோட்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த நடிகர் 'விஜய்', தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காகச் சென்னை வந்து நீலாங்கரையிலுள்ள ஓட்டுச் சாவடியில் வாக்களித்தாராம்.
ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு அவர் ஆளாகிவிடாமல் காவல் துறையினர் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைத்தார்களாம்.
இருப்பினும், அவர் கையிலிருந்த காயத்தை[சின்னஞ் சிறுசு]ப் பார்த்துவிட்டு அவரின் ரசிகக் குஞ்சுகளும், தொண்டரடிப்பொடிகளும் கண்ணீர் சிந்திக் கதறி அழுதார்களாம்.
தமிழ் மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இப்படியானதொரு செய்தியை, அதி முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது தினமலர்[இன்னும் பல ஊடகங்களிலும் இது குறித்த செய்தி வெளியாகியிருக்கலாம்].
தினமலரோ பிற ஊடகங்களோ வெளியிடாத ஒரு செய்தி{ரஷ்யாவிலிருந்து விஜய்யுடன் திரும்பிய ஓர் உதவி இயக்குநர்[நமக்கு மிக மிக மிக நெருங்கிய உயிர் நண்பர்] சொன்ன தகவல் இது}.....
இதை அறிந்தால், விஜய்யின் ரசிகர்களில் சிலரோ பலரோ தீக்குளித்து உயிர் துறப்பார்கள் என்பதால் ரகசியம் காத்ததாக உ.இயக்குநர் நம்மிடம் சொன்னார்.
விஜய்யின் காயங்கள் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்!