எனது படம்
ஆயுளின் இறுதி நாள்வரை நோய்களின் தாக்குதல் இல்லாமல் உடல்நலத்துடனும் மனநலத்துடனும் வாழ்ந்துமுடிக்க, நமக்கு வாய்த்துள்ள அறிவை முழுமையாகப் பயன்படுத்துதல் முக்கியம். சாமி பக்தி, சாமியார்களின் ஆசீர்வாதம், ஜாதகக் கணிப்பு போன்றவை ஆறறிவைச் சீரழிக்கும் என்பது உறுதி!

புதன், 13 மே, 2026

தவறு திருத்திப் புதிய வரலாறு படைத்த த.நா.முதல்வர் விஜய்!!!


தனி மனிதர்கள் தவறிழைப்பது போலவே,  அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் அறிந்தோ அறியாமலோ, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான அரசாணைகளைப் பிறப்பிப்பது இயல்பானதுதான்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஜோதிடருக்கு உயர் பதவி அளித்து ஆணை பிறப்பித்தது அம்மாதிரியான நிகழ்வுகளில் ஒன்று.

அரசால்/அரசுகளால் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணையைத் திருத்தி வெளியிடுவதோ, திரும்பப்பெறுவதோ மிக அரிதான நிகழ்வாகவே உள்ளது.

செய்த தவற்றை உணர்ந்து விஜய் அதைத் திரும்ப்பெற்றது வரவேற்கத்தக்கது.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே, ஆணை பிறப்பித்த சூட்டோடு[புதிய வரலாறு] அதைச் செல்லாததாக ஆக்கியது பெரும் பாராட்டுக்குரியது.