எனது படம்
தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே இன்றளவில், வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

புதன், 13 மே, 2026

'முன்னாள் முதல்வர்’ ஆவாரா விஜய்?!

“விஜய் தனக்கான பெரும்பான்மை ஆதரவை நிருப்பித்த சட்டமன்ற நிகழ்வில், அவருக்கு ஆதரவளித்த ‘அதிமுக’வினர் 25 பேர் மீதும், சட்டமன்றச் செயலர்[‘தவெக’காரர் அல்ல; தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்] நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் தளவாய் சுந்தரம்[எடப்பாடியார் 'அதிமுக’].

எடப்பாடி பழனிசாமியார் தன் பங்குக்கு, “தனக்கு ஆதரவளித்த ‘அதிமுக’வினரில் 6 பேருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார் விஜய்” என்று துப்பறிந்து கூறியிருக்கிறார்.

இந்தப் பரபரப்பான சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் கணபதி சிவக்குமார், “விஜய்க்கு ‘அதிமுக’வினர் ஆதரவு தருவதை எங்கள் தலைமை விரும்பவில்லை” என்று பகீர் கிளப்பியுள்ளார்.*

இந்தவொரு குழப்பமான சூழலில், த.நா.சட்டமன்றச் செயலர் விஜய்க்கு ஆதரவளித்த 25 ‘அதிமுக’வினரைப் பதவி நீக்கம் செய்வது, காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரும் விஜய்க்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது என்னும் விஜய்க்குப் பாதகமான சூழல் உருவானால்.....

விஜய் அரசு மீது ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டுவரப்படலாம்[மே 2026இல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்(No-Confidence Motion) கொண்டுவர முடியும். இதற்குத் தனிக் கால அவகாசம் எதுவும் இல்லை].

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் விஜய் ஆட்சி கவிழும் என்பது உறுதி.

ஆக, தமிழ்நாட்டில் நிலவும் அவலமான அரசியல் சூழ்நிலை பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது

                             *   *   *   *   *

*நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அதிமுகவின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆதரிக்கவில்லை(டி.கே. சிவக்குமார் / கணபதி சிவக்குமார்). -AI