வியாழன், 14 மே, 2026

தமிழ்நாடு அரசியலில் கூட்டணிக் கொள்ளையர்கள்!!!

ரசியல் கட்சி எதுவாயினும், அதன் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களிடம், “உங்கள் கட்சியின் பத்து... வேண்டாம், நான்கு முக்கியக் கொள்கைகளைச் சொல்லுங்கள்” என்று கேட்டால்,  தெளிவாகப் பட்டியலிடத் தெரிந்தவர்கள் எத்தனைபேர்?

ஒரு நான்கு பேர்கள்கூடத் தேறமாட்டார்கள்.

கொள்கைகளே இல்லாத சுயநலம் பேணும் சுகபோகிகள் நிறைந்த கட்சிகள்தான் இங்கே அதிகம். தனிக்கட்சியாக அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாதபோது, பிற கட்சியுடன் அல்லது கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துக் கூட்டாகக் கொள்ளையடித்துப் பங்கு பிரிக்கிறார்கள்.

இவர்கள் 100% சுயநலவாதிகள்.

கட்சிக்காரர்களிடம், “நீங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்தது ஏன் என்று கேட்டால், “மக்கள் நலம் பேணும் தூய்மையான ஆட்சியைப் பாதுகாப்பதற்கு” என்பார்கள்.

இணைந்த கூட்டணியைக் கழற்றிவிட்டுவிட்டு வேறொரு கூட்டணியுடன் சேர்ந்தாலும், இதே பொய்யைத்தான்[நிறையவே உதாரணங்கள் தரலாம்] சொல்வார்கள்.

சூடு சொரணை மானம் ரோஷம் எல்லாம் இவன்களுக்கு ஒரு பொருட்டே இல்லை; கொள்ளையடிப்பது ஒன்றே இவன்களின் குறிக்கோள்.

இவன்கள்தான் இன்று தமிழ்நாடு அரசியலில்[இந்திய அரசியலும் விதிவிலக்கல்ல] ஆதிக்கம் செலுத்துபவர்கள்.

இதற்கான வாய்ப்பை இந்தக் கழிசடைகள் பெறுவது பொதுமக்களின் அறியாமையால்.

பொதுவாக அறியாமை என்பதைவிடவும் போதுமான பொது அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாதது முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று இந்த அயோக்கியர்களை அரசியல் களத்திலிருந்து விரட்டியடிப்பது எப்போது?

இப்போதைக்கு இல்லை என்பதே எதார்த்தம்!