எனது படம்
தேர்தலில் போட்டியிடுகிறவனின் தனிப்பட்ட குறை நிறைகளைப் பொருட்படுத்தாமல், அவன் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளுக்காவே இன்றளவில், வாக்குரிமை பெற்ற நம் மக்கள் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், ஆதாயம் கருதிப் பிறிதொரு கட்சிக்கு[குறிப்பாக ஆளுங்கட்சி] ஆதரவாகச் செயல்பட்டால், தன் கட்சிக்கு மட்டுமல்லாமல், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவன் ஆகிறான் அவன். அந்த அயோக்கியன் தாலி கட்டிய தன் பெண்டாட்டிக்குக்கூடத் துரோகம் செய்யத் தயங்கமாட்டான்!

வெள்ளி, 15 மே, 2026

முதல்வர் விஜய் அவர்களே, இந்த ‘அடிதடியன்’[சி.வி.சண்முகம்]க்கு அமைச்சர் பதவியா?!

தன் கட்சித் தலைவரைக் கை தூக்கி அடிக்கும் அளவுக்கு அவர்[எடப்பாடி பழனிசாமி] இவனுக்கு[சி.வி.சண்முகம்]த் தனிப்பட்ட முறையில் கெடுதல் செய்திருக்க வாய்ப்பே இல்லை; ‘தவெக’வுக்கு ஆதரவு அளிப்பதில்தான் பிரச்சினை.

இவனை நீங்கள் அமைச்சர் ஆக்கினால், கோடிகளை அள்ளிக் குவிப்பதற்கான மேலும் பல சலுகைகளையும் எதிர்பார்ப்பான். நீங்கள் அதற்கு இசையாவிட்டால்.....

எடப்பாடியாரைத் தாக்குவதற்கு இன்று கையைத் தூக்கிய இவன் நாளையே உங்களைத் தாக்குவதற்குக் காலைத் தூக்குவான்.

தமிழ்நாட்டின் ஒரு சாமானியக் குடிமகனாக, தமிழ்நாட்டின் முதல்வரான உங்களின் ‘கௌரவம்’ கருதி எச்சரிப்பது என் கடமை.

இந்த எச்சரிக்கை எவ்வாறேனும் உங்களை வந்தடையும் என்னும் நம்பிக்கையில் இந்த விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளேன். நன்றி.