ஞாயிறு, 24 டிசம்பர், 2023

"ஒரே நாடு ஒரே மொழி"... ஆஹா, சரிங்க! ஏனுங்க இந்த ஓரவஞ்சனை?!?!

“இந்தியாவில் பல மாநிலங்கள் இருப்பினும், சில மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு தாராளமாக நிதியுதவி அளிக்கிறது. வேறு பல மாநிலங்களுக்குக் குறைவாகத் தருகிறது என்று சம்பந்தப்பட்ட மாநிலங்கள் குற்றம் சாட்டுவது வழக்கத்தில் உள்ள ஒன்று.

குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் ‘தினகரன் இதழின்[24.12.2023] தலையங்கத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாநிலமும் நடுவணரசுக்குச் செலுத்தும் வரியும், மத்திய அரசு, வரிப்பகிர்வாக அவற்றிற்குத் திருப்பித் தரும் தொகையும்[சதவீதத்தில் %] பின்வருமாறு:
 
மாநிலம்:               செலுத்துவது:             பெறுவது:

உத்தரப்பிரதேசம்                      ரூ1//=                          2.73//=

மத்தியப்பிரதேசம்                    ரூ1//=                           2.42//=

பீகார்                                               ரூ1//=                          7.06//=

அசாம்                                              ரூ1//=                           2.63//=

தமிழ்நாடு                                     ரூ1//=                           0.29//=

ஏனைய தென் மாநிலங்களுக்கும் இதே மாதிரி மிகக் குறைவாகத்தான் வழங்கப்படுகிறது.

தொடரும் ஓரவஞ்சனை:
[பொருளாதார்ப் பின்னணியைக் காரணம் காட்டி, நிதி ஒதிக்கீட்டில் பெரிதும் பாரபட்சம் காட்டியிருப்பது மிகப் பெரிய அநீதி]

10ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி 6.64 சதவீதம். 15ஆவது நிதி ஆணையம் அதை 4.08 ஆகக் குறைத்தது.

இதே காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேசத்திற்கு, 10ஆவது நிதி ஆணையம் ரூ17.81 சதவீதம் வழங்கியிருக்க, 15ஆவது நிதி ஆணையம் அதை 17.94 ஆக உயர்த்தியது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகியவை அதிக அளவில் இந்தி பேசப்படும் மாநிலங்கள் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது[அஸ்ஸாமில் இந்தியைப் பரப்புவதில் நடுவணரசு அதிக அக்கறை காட்டுகிறது. அஸ்ஸாம் மக்களோ அரசோ அதை முனைப்புடன் எதிர்க்கவில்லை].

இந்தப் பதிவின் நோக்கம் என்னவென்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இந்திய ஒருமைப்பாட்டை வாய் வலிக்க வலிக்க வலிக்க மோடி&அமித்ஷா தலைமை வலியுறுத்துவது இந்தி பேசும் ‘இந்தி’யர்களை வாழவைக்கத்தான்.

இந்த ஓரவஞ்சனை பற்றித் தமிழர்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? 

குறிப்பாக, அண்ணாமலை வகையறாக்கள் அறிந்திருப்பார்களா? அறிந்திருந்தும் ஏதும் அறியாத அப்பாவிகள் போல அவர்களின் கொத்தடிமைகளாகவே இருந்துகொண்டிருக்கிறார்களா?

                                        *   *   *   *   *
நன்றி: தினகரன்[24.12.2023] தலையங்கம்.