ஞாயிறு, 13 அக்டோபர், 2024

கடவுளின் மூளை!?!?!

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும்[மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொருத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால்[மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவர் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான[?] அவருக்கும் மூளை தேவைதானே?

உண்டெனில், அதற்கும் ‘உருவம்’ உண்டல்லவா? இல்லையெனில் அது அருவமானதா?

அருவமான ஒன்றின் மூலம் சிந்தித்துச் செயல்பட முடியுமா?

அது சாத்தியமா?

சாத்தியம்தான் என்பதை அறிவியல்பூர்வமாக எவரேனும் நிரூபித்தால் கொஞ்சமும் தயங்காமல் கடவுளை நம்பலாம்.

எப்போதேனும் எவரேனும் நிரூபிப்பார்களா?

எப்போது?