ஒரு நாடு எதிரி நாட்டுடன் போர் நிகழ்த்துதல் போன்ற மிக நெருக்கடியான சூழ்நிலைகளில், கள நிலவரங்களை அறியச் செய்யவும், பாதுகாப்பு & மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசிக்கவும், நாட்டின் பிரதமர்[அதிபரோ குடியரசுத் தலைவரோ] அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது வழக்கமான ஒன்றுதான்.
இந்த நடைமுறைக்கிணங்கவே, ‘இந்தியா - பாகிஸ்தான்’ போர் தொடங்கியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் மோடியின் உத்தரவுப்படி இன்று கூட்டப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்படப் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில்.....
இந்த நாட்டின் பிரதமரும் முப்படைகளையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருமான நரேந்திர மோடி கலந்துகொள்ளாதது[ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை] நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது.
இதைத் தவிர்க்கும் அளவுக்கு இதைவிடவும் வேறு முக்கியப் பணி எதையும் அவர் மேற்கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.
அப்புறம் ஏன் அவர் கூட்டத்தைப் புறக்கணித்தார்?[காங்கிரஸ் கட்சித் தலைவர் ‘கார்கே’ உட்பட இதே கேள்வியைத்தான் உறுப்பினர்கள் பலரும் கேட்டிருக்கிறார்கள்].
மோடி கலந்துகொள்ளாததன் காரணங்களை அவர்கள் அறிந்திருப்பார்களோ அல்லவோ, நாம் அறிந்தவை:
1.போர் குறித்த முக்கியத் தகவல்களை[ரகசியத் தகவல்கள் நீங்கலாக] அனைத்துக் கட்சியினருக்கும் தெரிவிப்பதால் பயன் ஏதுமில்லை.
2.ஆலோசனைகள்[போர் நடத்தும் மோடிக்கு] வழங்குவதற்கான அறிவு இவர்களில் எவருக்கும் இல்லை. அதாவது, அனைத்துக் கட்சி உறுப்பினர்களுமே[அமித்ஷா, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, கார்கே உட்பட] சொத்தை மூளையர்கள்.
3.கூட்டம் நடக்கும் கட்டடத்தின் மீது நம் எதிரி பாகிஸ்தான்காரன் அணுகுண்டு போடக்கூடும் என்னும் அச்சம்[ஹி... ஹி... ஹி!!!]