எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தமிழிசையாம்... நல்லா பேரு வைத்தாரய்யா குமரி அனந்தன்!!!

‘தமிழிசை சவுந்தரராஜன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போருடன் Zoom மீட்டிங் மூலம் வாக்குச் சேகரித்தார். இந்த மீட்டிங்கின்போது ஆபாசமான படங்களைச் சில விஷமிகள் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து அந்த மீட்டிங் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது’ என்பது அண்மைச் செய்தி.https://tamil.oneindia.com

இதனால் தமிழிசை அம்மா மிகவும் வருத்தப்பட்டாங்களாம்.

வருத்தத்திற்கிடையே.....

தன் ‘எக்ஸ்’ பக்கத்தில், ‛‛இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடலைத் தொடங்குகையில்[ஆங்கிலத்தில் என்பது செய்தி], சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று விஷமிகளுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விஷமிகளின் செயல் கடும் கண்டனத்திற்கு உரியது என்பதிலோ, முன்னாள் ஆளுநர் தமிழம்மா அவர்களைக் கண்டித்ததிலோ தவறே இல்லை.

ஆனால்.....

Zoom சந்திப்பில் இவர் உரையாடலைத் தொடங்கியது ஆங்கிலத்தில்[சென்னையில் உள்ளவர்களுக்குத் தமிழ் தெரியாதா?!].

தானே தமிழாய், தமிழே தன் உயிர்மூச்சாய்க் கொண்ட குமரி அனந்தன்[91 வயது] அவர்கள், தான் பெற்றெடுத்த இந்தத் தவப் புதல்விக்குத் தமிழிசை என்று பெயர் சூட்டியபோது பேரானந்தத்தில் மூழ்கியிருப்பார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழைப் புறக்கணித்த இவரின் இழி செயலைத் தமிழ் மக்கள் மன்னிப்பார்களோ அல்லவோ, குமரி அனந்தன் மன்னிக்கமாட்டார்.

தமிழிசையாம் தமிழிசை! மனம்போன போக்கில் வசை பாடத் தோன்றுகிறது. வேண்டாம்.

                                    *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/obscene-pictures-shared-in-the-tamilisai-soundarajans-zoom-meeting-598399.html

//அந்த பதிவில் தமிழிசை சவுந்தராஜன் பேசும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் பேசுகிறார். அதில் ‛‛வணக்கம், முதலில் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....//https://tamil.oneindia.com/