அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தொட்டுப் பேசுங்கள்!!!

‘உடல் & மன ஆரோக்கியத்திற்குத் தொடுதல் நன்மை பயக்கும்’ என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

'நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர்' இதழில், ஜெர்மனியின் ரூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூலியன் பேக்ஹெய்சர் மற்றும் சக பணியாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழு  மேற்கண்டவாறு கூறியிருக்கிறது.

தொடுதல் என்றால் விரல்களால் வெறுமனே தொடுதல் என்றில்லை; வயதுக்கேற்ப, எதிரே இருப்பவரின் தோள் தொட்டோ கரம் பற்றியோ உரையாடுவது இருவருக்குமான உறவை மேம்படுத்தும் என்கிறது மேற்கண்ட குழு.

உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின்  முன்தலை தடவி, முகம் பார்த்து ஆறுதல் சொல்வது பயனளிப்பதாக அமையுமாம்.

இந்தத் தொடுதல் பழக்கம் தொடுபவர் தொடப்படுபவர் என்னும் இருதரப்பாருக்கும் மிகுந்த நன்மை விளைவிக்கிறது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

வருடுதல், கட்டிபிடித்தல் போன்றவையும் தொடுதல் வகையில் அடங்கும் என்கிறது மேற்கண்ட ஆய்வுக்குழு. 

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமும் இவ்வாறு நடந்துகொள்வது தவறில்லைதான், அவர்கள் அழகான குமரிப் பெண்களாகவும், கற்பனையில் குமரிகளாக வாழும் சில நடுத்தர வயசுக்காரிகளாகவும் இல்லாமலிருந்தால் மட்டும்!

                          *   *   *   *   *

https://www.nature.com/articles/s41562-024-01841-8 

என்னும் தளத்திலிருந்து சேகரித்த தகவல்களின் மிகச் சுருங்கிய வடிவம், நம் மொழிக்கேற்பச் செய்யப்பட்ட சிறு மாற்றங்களுடன்.