அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 13 ஏப்ரல், 2024

தலிபான் தறுதலைகள்!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியபோது, தங்களின் முந்தைய ஆட்சி போலக் கொடூரமாக இருக்காது என்று தலிபான்களின் தலைவர் முல்லா ‘ஹிபத்துல்லா அகுந்த்சாடா’ பேசும் ஆடியோ, அரசுத் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது.

ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.

பெண்கள் உயர் கல்வி கற்கத் தடை[பெண்கள் கல்வி கற்பதிலேயே அவர்களுக்கு உடன்பாடு இல்லை] உள்படப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன; படுகின்றன.

கெடுபிடிகள் என்பதைக் காட்டிலும் அட்டூழியங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்பதே மிகப் பொருத்தமானது.


அவற்றில்,


விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் பொது இடங்களில் கல்லெறிந்து[கசையடியுடன்] கொல்லப்படுவார்கள் என்பதும் ஒன்று.


மேம்போக்காகப் பார்த்தால், இச்சட்டம் மக்களை ஒழுக்கநெறி பிறழாமல் வாழ்ந்திடச் செய்யும் என்றுதான் எண்ணத் தோன்றும்.


ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால், தலிபான்கள் அறிவிலிகள் மட்டுமல்ல, பெண்களை அடக்கி ஆளத் துடிக்கும் அயோக்கியர்கள் என்பது புரியும்.


நடுநிலை உணர்வுடன் சிந்தித்திருந்தால்.....


விபச்சாரம் செய்கிற பெண்கள் மட்டுமல்ல, உடலுறவுச் சுகத்துக்காக அவர்களைத் தேடிப்போகும் ஆண்களும் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள் என்று சட்டம் பிறப்பித்திருத்தல் வேண்டும்.


சொல்லப்போனால், விபச்சாரிகளைத் தேடிச் செல்லும் காமுகர்களைத்தான் முதலில் அடித்துக் கொல்லுதல் மிக அவசியம்.


சுகம் தேடிப் போகிறவன்கள் இல்லாவிட்டால் காசுக்காகச் சுகமளிக்கும் தொழிலில் நடைபெற வாய்ப்பே இல்லை.


தங்களைப் பெற்றெடுத்தவர்களே பெண்கள்தான் என்னும் குறைந்தபட்ச அறிவும், நடுநிலையுடன் சிந்திக்கும் பக்குவமும் இல்லாத இந்த மதவெறியர்கள் உடனடியாக அழித்தொழிக்கப்படுதல் அவசரத் தேவை.


பெண்களைப் போற்றும் உலக நாட்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இது சாத்தியமாகும்.


குறிப்பு: “உலக அளவிலான பிரச்சினைகள் பற்றி எழுதுகிறாயே, இதனால் என்ன பயன்? உலகறிந்த பிரபலப் பதிவர் என்னும் நினைப்போ?” என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம். 


“ஆசையால்[ஆசை பற்றி] அறையலுற்றேன்[இராமாயணக் காப்பியம் படைத்தது]” என்று கம்பன் சொன்னானல்லவா, அது போல் பிரபலம் ஆகும் ஆசையால் எழுதப்பட்டது இந்தப் பதிவு! 


ஹி... ஹி... ஹி!!!


                                          *   *   *   *   *


https://www.dailythanthi.com/News/World/taliban-to-resume-stoning-women-in-public-for-adultery-report-1099483?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhBAUQ6VKwIUuERCN2qDtgZWKhQICiIQQFEOlSsCFLhEQjdqg7YGVjDnnvgB&utm_content=rundown