மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Saturday, April 25, 2015

‘நல்ல நேரம்’ பார்க்கும் ‘நட்டு’ கழன்றதுகளிடம் ஒரே ஒரு கேள்வி!

இந்தப் பதிவு, மிகப் பெருமளவில்[குறைந்தபட்சம் 100000{ஒரு லட்சம்}] ‘ஹிட்ஸ்’கள் பெறுதல் பொருட்டு, முற்பகல் 10.30 மணிக்கு[ராணிமுத்து நாட்குறிப்பின்படி இன்று 10.30 - 11.30 நல்ல நேரம்] வெளியிடப்படுகிறது. [ஒரு 500 தேறுமா பார்ப்போம்!!!]


ரு தினசரியில்[25.04.2015], ‘ராகு காலம்’ கடக்கக் காத்திருந்த ஜி.கே. வாசன்’ என்னும் தலைப்பின் கீழ்..........
#தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நேற்று வானகரத்தில் நடந்தது. இந்தக் கூட்டம் காலை பத்து மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கவில்லை.

காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை ராகு காலம் என்பதால் கூட்டத்தில் பங்கேற்கக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விழா அரங்கிற்கு வரவில்லை. ராகு காலம் முடிந்த பிறகு 12.15 மணிக்கு அவர் மேடைக்கு வந்தார். அதன் பிறகே நிகழ்ச்சிகள் தொடங்கின# என்னும் செய்தியைச் சற்று முன்னர் வாசிக்க நேர்ந்தது.
பெருமதிப்பிற்குரிய ஜி.கே வாசன் அவர்களிடம் மட்டுமல்ல, எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக ‘நல்ல நேரம்’ பார்க்கும் அனைத்து அதிபுத்திசாலிகளிடமும்['நட்டு' கழன்றதுகள் என்று தலைப்பில் குறிப்பிட்டது வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை]  நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி...........

ஒவ்வொரு நாளிலும், நல்ல நேரங்களுக்கிடையே ‘கெட்ட நேரம்’களும்[எ.டு: 24.04.2015, ராகு காலம் 10.30 - 12.00; எமகண்டம்: 03.00 - 04.30] வரத்தானே செய்கின்றன. ஒரு செயலை நல்ல நேரத்தில் தொடங்கிச் செய்துகொண்டிருக்கிற நீங்கள், இடையிடையே குறுக்கிடும் ‘கெட்ட’ நேரங்களில் உங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதில்லையே, ஏனய்யா? ஏன்?!

‘தொடங்குவதற்கு மட்டும் நல்ல நேரம்! அப்புறம் அது தேவையில்லை’.....இப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்களா, அல்லது அதை நம்புகிறவர்களா, இவர்களில் ஆகச் சிறந்த முட்டாள்கள் யாரெல்லாம்?

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கவும் செய்யலாமே! 

##########################################################################################################

10.30 என்று கணினி காட்டிய நேரத்தில் பதிவைக் ‘கிளிக்’ செய்ய,  நேரம் 10.29 என்று பதிவாகியிருக்கிறது. எல்லாம் என் நேரம்!!!!!

##########################################################################################################

No comments :

Post a Comment