எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 13 அக்டோபர், 2023

வாயால் கெடும் ‘ஹமாஸ்’ தவளைகள்!!!

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்னும் பழமொழி பலரும் அறிந்ததே.

‘நுணல்’ என்றால் தவளை. 

‘தன் வாயால் கெடும்’ என்றால்.....

தவளையானது, இரவு நேரங்களில் தனக்கான இணையைத் தேடச்  சப்தம் கொடுக்கும். பாம்பு அந்த ஓசையைக் கேட்டு, தவளை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதை உணவாக்கிக்கொள்ளும் என்பது பொருள். தேவையே இல்லாத அனாவசியப் பேச்சுகளைப் பேசுவோர் தம் வாயால் கெடுவார்கள் என்பது இதன் உட்கருத்தாகும். 

கீழ்க்காணும் காணொலியில் இடம்பெற்றுள்ள, ‘ஹமாஸ்’ தளபதியின் உரை தவளையின் கார்கால[மழைக்காலம்] வறட்டுக் கத்தலை ஒத்திருக்கிறது. 

[''முழு பூமியையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்....'' -ஹமாஸ் தளபதி!!! 

இஸ்ரேலியரும் குற்றங்கள் பல செய்திருக்கலாம். ஆனால், இப்படிக் கிறுக்குத்தனமாக அவர்கள் கூச்சலிடுவதில்லை].

‘ஒட்டுமொத்த உலகையும் தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவருவோம்’ என்று கூக்குரல் எழுப்பும் இவர்கள் கொண்டுவந்திருக்கலாமே?

கொண்டுவந்திருந்தால்.....

இஸ்ரேல், உலகின் உள்ளடக்க நாடுகளில் ஒன்று என்பதால், அந்தத் துக்கிளியூண்டு நாட்டுடன் போர் நிகழ்த்த வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

ஏன் செய்யவில்லை?

உலக நாடுகளை அடிமைப்படுத்தி, தங்களின் மதத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும்[‘ஒரே உலகம் ஒரே மதம்’] என்னும் இஸ்லாம் தீவிரவாதிகள் கண்டுகொண்டிருக்கும்[???] நீண்ட காலக் கனவின் வெளிப்பாடுதான் இந்தத் தளபதியின் உரையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த உரையின் பின்விளைவுகள் குறித்து இவர் சிந்திக்கவே இல்லையா?

கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால்.....

இவர்களுக்கும்[இஸ்லாம் தீவிரவாதிகள்] இஸ்ரேலியருக்கும் இடையிலான போரில் எச்சார்பும் இன்றி நடுநிலை வகிக்கும் நாடுகள் எல்லாமே இவர்களின் பக்கா எதிரிகளாக மாறுவார்கள் என்பது புரிந்திருக்கும்.

“இவர்களுக்கு நல்ல புத்தியைத் தாருங்கள்” என்று இவர்களின் கடவுளான அல்லா[ஹ்]விடம், இஸ்லாம் பொதுமக்கள் உட்பட உலகோர் அனைவரும் கோரிக்கை வைக்கலாம்.

அல்லா செவிசாய்ப்பார் என்பது நம் நம்பிக்கை!