வியாழன், 12 அக்டோபர், 2023

மதங்களும் ‘மசுரு’க்குச் சமானமான மனித உயிர்களும்!!!

//ஹமாஸ் ஒரு நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலுடன் போரிட ஆயுதக் களஞ்சியம் இருப்பதாகவும் போராளிக் குழுவின் மூத்த தலைவர் AP இடம் கூறினார்// என்பது செய்தி https://www.editorji.com/

ஒட்டுமொத்த உடம்பையும் சிலிர்க்கச் செய்யும் அறிவிப்பு இது.

இவர்கள்[ஹமாஸ்] தீவிரவாதிகள்  போராளிகள். இஸ்லாம் இவர்களின் மதம். அதை அழிக்க முயல்வோர், குறிப்பாக யூதர்கள் இவர்களின் எதிரிகள்; பரம்பரை எதிரிகளும்கூட.

ஒருவரோடு ஒருவர் சிறு சிறு போர்கள் நிகழ்த்தி, பழிதீர்ப்பதும், எதிரிகளின் உயிர்களைத் தத்தம் உயிரினும் மேலாக மதிக்கும் கடவுள்களுக்குப் பலி கொடுப்பதும் வழக்கமாகிப்போன ஒன்று.

பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்றிருப்பதை ஆயிரக்கணக்காக ஆக்குவது இரு தரப்பாரின் உள்நோக்கமாக இருந்திருக்கக்கூடும்.

அதற்கான முயற்சியை, அதிரடியாய் இஸ்ரேலைத் தாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியப் பொதுமக்களைக் கொன்று குவித்தும் படுகாயப்படுத்தியும் தொடங்கி  வைத்தவர்கள் ‘ஹமாஸ்’ எனப்படும் இஸ்லாம் மதம் சார்ந்தவர்கள்.

இதன் விளைவு.....

இரு தரப்பாரும் நிகழ்த்திக்கொண்டிருந்த சிறு சிறு போர்கள் இப்போது பெரும் போருக்கு வழிவகுத்திருக்கின்றன.

தன்னைத் தாக்கிய ‘ஹமாஸ்’ காரர்களுக்குப் பதிலடியாக, இரவு பகல் பாராமல் அவர்களைத் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேல் பிரதமர் ‘ஹமாஸைப் பொடிமாஸ் ஆக்குவதாகச் சபதம் செய்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

அஞ்சா நெஞ்சர்களான ஹமாஸ்காரர்கள், தாங்கள் நீண்டதொரு போருக்குத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஆயுத பலம் தங்களுக்கு இருப்பதாகவும் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.

நீண்ட நெடுங்காலம் போர் புரிவதற்கான நெஞ்சுரமும், அதி நவீனப் போர்க் கருவிகளும் இஸ்ரேலியர் வசம் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

கால வரையறை இல்லாமல் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தப் போரில் இரு தரப்புப் படை வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதைக் காட்டிலும், மறைந்திருந்து, மருட்டும் அதி நவீனப் போர் ஆயுதங்களால் தாக்கிக்கொள்வார்கள் என்பதால்.....

போர் வீரர்களைக் காட்டிலும் மிக மிக மிக அதிக எண்ணிக்கையில் இரு தரப்புப் பொதுமக்களும் செத்தொழிவார்கள்.

ஒழியட்டும். மசுருக்குச் சமானமான மனித உயிர்களைவிடவும் மதங்கள் மேலானவை அல்லவா?!
                                       
                                         *   *   *   *   *

‘senior leader of the militant group told the AP that Hamas was ready for a long war and it had an arsenal to fight Israel’