‘ஷானி லவுக்’(30) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்.
இவர், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ளார். நிகழ்ச்சி நடந்த இடம், முதன் முதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் நாட்டின் எல்லைக்குள் உள்ளது..
தாக்குதலின்போது, ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டவர்களில் இந்தப் பெண்ணும் ஒருவர்.
ஹமாஸ்காரர்களால் வெளியிடப்பட்டு, பலராலும் பார்க்கப்பட்டு, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு காணொலியில்[video மேற்கண்டது].....
‘ஷானி லவுக்’ நிர்வாணம் ஆக்கப்பட்ட கோலத்தில், உயிரில்லாத அந்த உடலை ‘ஹமாஸ் நாசகாரர்கள்’ காலால் மிதித்துக்கொண்டும், அதன் மீது எச்சில் துப்பிக்கொண்டும் ஒரு ‘டிரக்’கில் கொண்டுசெல்லும் கொடூரக் காட்சி இடம்பெற்றிருந்தது.
அந்த டிரக்கைச் சூழ்ந்து சென்ற படுபாவிகளும் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம்.
ஹமாஸ் தீவிரவாதிகளின் இந்தச் செயல் உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்களைப் பெரிதும் கவலை அடையச் செய்துள்ளது
‘ஷானி லவுக்’ சடலம் டிரக்கில் கொண்டுசெல்லப்படுவதை வீடியோவில் பார்த்துக் கதறி அழுத ஷானியின் தாயார் ‘ரிக்கார்டா’, தனது மகளின் உடலைக் கண்டுபிடிக்கப் பாலஸ்தீனர்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது நேற்றைய[09.10.2023]ச்செய்தி.https://www.hindutamil.in/news/world/1135991-dead-german-woman-disrespected-video-goes-viral-on-social-media.html.
‘ஷானி லவுக்’கின் தாய் கதறி அழுதார். அந்தத் தாயின் மன வேதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
தன் மகள் உயிரோடிருக்கும்போதே அவளை அலங்கோலப்படுத்தி, ஹமாஸ் காலிகள் நடத்திய வன்கொடுமைகளைக் கற்பனை செய்து செய்து அந்தத் தாயுள்ளம் பட்ட... படும் வேதனை விவரிப்புக்கு அப்பாற்பட்டதாகும்.
இஸ்லாமியரோ யூதர்களோ, தங்களின் எதிரியை வஞ்சம் தீர்க்க, ஏதுமறியாத அபலைப் பெண்களை எப்படியெல்லாமும் சித்தரவதை செய்து கொன்று, அம்மணக் கோலத்தில் காலால் மிதித்தும் காறித் துப்பியும் அவமானப்படுத்துவதற்கு இவர்களின் மதம்தான் கற்றுக்கொடுத்ததா?
திருடர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பகைவர்களைக் கொலை செய்பவர்கள் என்று குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பலரையும் உள்ளடக்கியது இந்த மனித சமுதாயம்.
இவர்களை அத்தனை பேரும் இந்த ஹமாஸ் என்னும் அயோக்கியர்களுக்கு ஈடாகமாட்டார்கள்.
இவர்களும் இவர்களைப் போன்ற[எம்மதத்தவராயினும்] கயவர்களும் மிச்சம் சொச்சம் இல்லாமல் நிர்மூலம் ஆக்கப்படுதல் உடனடித் தேவயாகும்.
இத்தத் தேவையை நிறைவேற்ற, ‘சாதி மத இன’ வேறுபாடுகளைக் கடந்து மனித நேயம் போற்றுகிற ‘மனிதர்கள்’ ஒருங்கிணைந்து, இது குறித்துச் சிந்திப்பதும், விரைந்து செயல்படுவதும் தவிர்க்கக் கூடாதது; தாமதப்படுத்துவதும் கூடாது.