‘அருட்பிரகாச வள்ளலார்’ என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, "பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்" என்று கூறியுள்ளார்[https://tamil.oneindia.com/].
வள்ளலார் உயிரோடு இருந்தால் பெண்களுக்கான ஒதுக்
கீட்டைப் பாராட்டியிருப்பார் என்பது மோடியின் எதிர்பார்ப்பு;
பேராசையும்கூட.
'எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; மத வெறி கூடாது' ஆகியவை வள்ளலாரின் முக்கியக் கொள்கைகள்[https://ta.wikipedia.org/wiki/].
அவர் மோடிக்குப் பாராட்டுரை வழங்கியிருப்பார் எனின், அதற்கு முன்னால்.....
“இந்தியாவை மதச் சார்பின்றி[சமரச சன்மார்க்கம்] வழிநடத்த வேண்டிய நீங்கள், இந்துத்துவா வெறியை வளர்க்கிறீர்கள்; இந்த நாட்டின் பெயரை ‘இந்து ராஜ்ஜியம்’ என்றோ, ‘ராமராஜ்ஜியம்’ என்றோ மாற்ற முயல்கிறீர்கள்; இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்த்து, இந்த நாட்டின் பிற மொழிகளையும், அந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து அழிக்க நினைக்கிறீர்கள். இதுவா நீங்கள் என் சமரச சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சணம்?” என்று கேட்டிருப்பாரே, அதற்குப் பிரதமர் மோடியால் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்லியிருக்க முடியுமா?
இதே விழாவில் கலந்துகொண்ட, புனிதராம் ஆளுநர் ரவி,
“அனைவரும் ஒன்று என்று வள்ளலார் சொல்வதுதான் சனாதன தர்மம்” என்று சனாதன தர்மத்திற்குப் புத்தம் புதிய விளக்க உரையை வழங்கியிருக்கிறார்.
பாவம் சனாதன தர்மம், இவரையும், இவரைப் போன்ற இதர அதர்மவாதிகளிடமும் சிக்கிப் படாதபாடு படுகிறது அது.
“அனைவரும் சமம்[ஒன்றுதான்] என்பது சிந்திக்கத் தெரிந்த எவரொருவரும் வலியுறுத்துகிற வாழ்வியல் நெறியாகும். இதைச் சொல்ல சனாதன தர்மம், சர்வலோக நிவாரணம் எல்லாம் தேவையில்லை.
வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அறநெறிகளும்[தர்ம நெறி] சனாதன தர்மத்தில் அடங்குகின்றன என்று மக்களை நம்பச் செய்ய இவர்கள் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.
மாநிலத்தை ஆளுபவர் அல்லவா, அனைத்தும் தெரிந்த மகான் என்னும் நினைப்பில் மனம்போன போக்கில் எதையும் பேசலாம்; எப்படியும் பேசலாம்; பேசுகிறார்; பேசிக்கொண்டே இருக்கிறார் ரவி!
தமிழர்களை மன நோயாளிகள் ஆக்கி, அவர்களின் மொழிபற்றையும் இனப்பற்றையும் அறவே இல்லாமல் செய்வதற்குத்தான் இவரை ஆளுநர் கிரீடம் சூட்டி இங்கு அனுப்பியிருக்கிறார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் மோடி.
* * * * *
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D