//2015இல் ‘கேலப் இண்டர்நேசனல்’ நிறுவனமும், 2006-2008இல் ‘கேலக்பூர்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, உலகில் பல நாடுகளில் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது// என்கிறது ‘விடுதலை’ இதழ்.
இதன் விளைவாக, அந்த நாடுகள் கிடு கிடு வளர்ச்சி பெறுவதோடு, அந்நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களாம்.
***சீனா: இது, மக்கள் தொகையில் மட்டுமல்லாமல், அறிவியல் துறையிலும் வெகு வேகமாக முன்னேறும் நாடாகும்.
2015இல் ‘கேலப் இண்டர்நேசனல்’ நடத்திய கருத்துக் கணிப்பு, இங்கு 61 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்கிறது.
இப்போது அந்த விழுக்காடு 90[%] ஆக அதிகரித்துள்ளமை அதன் கிடு கிடு முன்னேற்றத்துக்கு வழிகோலியுள்ளது என்கிறார்கள் அறிஞர்கள்.
***டென்மார்க்: ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு டென்மார்க். பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாகும். இங்கே 58 லட்சம் மக்கள் வாழுகிறார்கள்.
இவர்களில், 61 சதவிகித மக்கள் கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் அக்னாஸ்ட்டிகளாக[“எங்களுக்கில்லை கடவுள் கவலை” என்பவர்கள்].
இவர்கள் கவலைப்படுவதெல்லாம் அன்றாட வாழ்க்கைக்காக.
புத்திசாலிகள்!
***நார்வே: ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கின்ற நாடுகளில் ஒன்றுதான் நார்வே. மக்கள் தொகை 55 லட்சம்.
இவர்களில் 62 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.
இவர்கள், மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வதாகச் சொல்கிறார்கள்.
***ஆஸ்திரேலியா:
2.5 கோடி மக்களைக் கொண்டது ஆஸ்திரேலியா.
2006ஆம் ஆண்டு 19 சதவிகித மக்களும், 2015ஆம் ஆண்டு 22 சதவிகித மக்களும், 2016ஆம் ஆண்டு 30 சதவிகித மக்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இப்போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், எச்சார்பும் இல்லாதவர் ஆகியோர் எண்ணிக்கைசுமார் 63 சதவிகிதம் ஆகும்.
மக்கள் போதிய வசதியுடன் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று.
***வியட்நாம்: இங்கே 9.6 கோடி மக்கள் வாழுகிறார்கள். இந்த நாட்டினுடைய அரசமைப்புச் சட்டப்பட எந்தவொரு மதத்தையும் ஏற்கலாம்.
இங்கே 2007ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 87 சதவிகித மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.
***அசர்பைஜான்: கிழக்கு ஐரோப்பாவில் இருக்கின்ற ஒரு சிறியநாடுதான் இது. இங்கே 1.2 கோடி மக்கள் வாழுகிறார்கள். இது ஒருஇஸ்லாமிய நாடு. ஆனால், இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது.
இவர்களின் வாழ்க்கைத்தரம் குறையவில்லை.
***பெல்ஜியம்: சாக்லெட்டு உற்பத்தியின் மூலம் பிரபலமான நாடு இது. இங்கு ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். மீதமுள்ள மக்கள் இஸ்லாம், ஈடன் போன்றவற்றைப் பின்பற்றுகின்றனர்.
62 சதவிகித மக்கள் மதத்தையும், கடவுளையும் ஏற்காதவர்களாக உள்ளனர்.
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள நாடு இது.
***நெதர்லாண்ட்: இங்கே சுமாராக ஒரு கோடியே 76 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் என்று பலமதம் தழுவியவர்கள் இவர்களில் உள்ளனர்.
எனினும், 2010ஆம் ஆண்டிலேயே எந்த மதத்தையும் ஏற்காத மக்கள் 51 சதவிகிதமாக இருந்தார்கள்.
அந்த எண்ணிக்கை இப்போது 66%. வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.
***செக் ரிபப்ளிக்: இந்த நாட்டில் 1.7 கோடி மக்கள் இருக்கிறார்கள். சிறிய நாடாக இருந்தாலும், பேமஸ் ஆன்டி வைரசானஆவஸ்ட்’, ஸ்கோடா கார் பிராண்ட், பீர் பிரியர்களின் பட்வைசர், பேட்டா’ எனும் செருப்பு நிறுவனம் என்றிவற்றின் மூலம் வளர்ச்சி பெற்ற நாடு இது.
72 சதவிகித மக்கள் எந்த மதத்தையும் ஏற்காமலிருப்பது இதற்குக் காரணம்.
***சுவீடன்: ஐரோப்பியக் கண்டத்தில் மிகப் பிரபலமான நாடுகளில் ஒன்று சுவீடன்.
இங்கு ஒரு கோடியே 18 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் பெரிய சுற்றுலா நாடு என்பதால் ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் கடவுளளை ஏற்பதில்லை. எனவே, மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
மேற்கண்ட நாடுகளைத் தவிர, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னேறிய நாடுகளில், கணிசமான அளவில் கடவுள் மறுப்பாளர்கள் உள்ளனர் என்பது அறியத்தக்கது.
*இந்தியா: இந்தியாவில் 05% பேர் மட்டுமே கடவுள் மறுப்பாளர்களாக உள்ளனர்.
இது, இந்த நாட்டை முன்னேறச் செய்யுமா, பின்னோக்கித் தள்ளுமா??
காலம் பதில் சொல்லும்!