கேள்வி மேல் கேள்வி கேட்டு, ஆய்வு மேல் ஆய்வு நிகழ்த்தினாலும், கடவுள் என்று ஒருவர் இருப்பதை நிரூபிக்க முடியாது என்பதைச் சொல்ல நினைத்த ‘பெரியார்’, “கடவுளாவது வெங்காயமாவது”[காதலாவது கத்தரிக்காயாவது என்பது போல] என்று சொல்லிவைத்தார்.
வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் மிஞ்சுவது எதுவுமில்லை என்பதை மனதில்கொண்டு, கடவுளையும் வெங்காயத்தையும் அவர் ஒப்பிட்டுப் பேசியதாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள்; இன்றும் சொல்கிறார்கள்.
‘த.நா.பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களும், அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி... உரித்தால் ஒன்றுமில்லை” என்று கூறியிருக்கிறார்{பதவியால் அவருக்குப் பயன் ஏதும் இல்லை என்னும் அர்த்தத்தில்[அப்பாவி அண்ணாமலை?!] சொல்லியிருக்கலாம்}.
வெங்காயத்தின் அடுக்குகளை[Layer] முழுமையாகப் பிரித்தெடுத்தால் எதுவும் மிஞ்சுவதில்லையா என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாக என் உள்மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
இந்தச் சந்தேகத்தைப் பிறரிடம் பகிர்ந்துகொண்டதும் உண்டு.
“ஆமாம்” என்பவர்களிடம், “ஒவ்வொரு அடுக்காகப் பிரித்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாக இருந்தது.
ஒரு சோதனை முயற்சியாக, சற்று முன்னர் ஒரு பெரிய வெங்காயத்தை நிதானமாக உரித்தபோது, ஒரு கட்டத்தில் அதற்கு மேலும் பிரிக்க இயலாததோடு, சிறியதொரு ‘பருப்பு’ எஞ்சியிருப்பதைக் காண நேர்ந்தது.
வெவ்வேறு கோணங்களில் அதைப் படமெடுத்தேன்.
அவை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சியிருந்த பருப்பு[மேலும் பிரிக்க இயலாதது]
[பருப்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]
சிறிய வெங்காயத்தைப் பிரித்தெடுப்பது எளிதல்ல. அதன் எஞ்சிய பகுதியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
[சின்ன வெங்காயம்]
[முழுதும் உரித்தெடுத்த நிலையில்]
ஆர்வ மிகுதியால் மேற்கொண்ட சோதனை முயற்சி இது.
அடுத்த ஆய்வு.....
“காதலாவது கத்தரிக்காயாவது” என்னும் சொல்வழக்கை ஆராய்வது. ஹி...ஹி...ஹி!!!