தமிழ்நாட்டின் ஆளுநர் பெயர் ஆர்.என்.ரவி. ‘தான் எல்லாம் தெரிந்தவன்’ என்னும் இறுமாப்பு இவரின் குருதியில் இரண்டறக் கலந்துள்ளது.
காவல்துறையில் அதிகாரியாக இருந்தபோது மேடை ஏறிப் பேசுவதற்கான வாய்ப்பே அமையாத இவர், தனக்கான பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி நினைத்தபோதெல்லாம் மேடை ஏறத் தவறுவதே இல்லை.
//தமிழக அரசியல் வரலாற்றில் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பஞ்சமில்லாத ஓர் ஆளுநராக ஆர்.என்.ரவி உருவெடுத்திருக்கிறார். ஆளுநராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் அவர் செல்லும் இடங்களிளெல்லாம் நீட், மும்மொழித்திட்டம், புதிய கல்விக்கொள்கை, சனாதனம், கால்டுவெல், திராவிடம் என அவர் பேசிய சர்ச்சைப் பேச்சுகள் ஏராளம். தற்போதும்கூட ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம், மசோதா நிலுவை பற்றியெல்லாம் சர்ச்சையாகப் பேசியிருக்கிறார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைச் சட்டைசெய்யவதில்லை. கன்னித்தீவு தொடர்கதை போன்றது அவருடைய நடவடிக்கை// [https://www.vikatan.com/government-and-politics/politics/unruly-governor-ravis-outrageous-controversial-speeches-full-collection].
தமிழர்தம் இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றை அழித்தொழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ‘பாஜக’வின் கைக்கூலியான இவரை, தமிழ்நாட்டைவிட்டே விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் நம்மவர் விருப்பம். அதிகாரப் பலம் மிக்க ஒன்றிய அரசின் செல்லப்பிள்ளை இவர் என்பதால் அது சாத்தியப்படவில்லை.
தமிழர்களின் நலனுக்கான தமிழ்நாடு அரசின் நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே முழு நேரப் பணியாகக் கொண்டுள்ள இவரை, நாம் அறிந்துள்ள அத்தனைக் கெட்ட் வார்த்தைகளாலும் வசை பாட வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. நாம் ஆளப்படுகிற இனத்தவர் என்பதால் அந்த ஆசை நிறைவேறவில்லை.
தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு இவர் அடிக்கும் கொட்டம் சொல்லி மாளாது. கண்ணிருந்தும் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம், சும்மா இருப்பதைத் தவிரச் சுயமாகச் செயல்படும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதால்.
ஆக, தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் இவரை எதிர்த்துச் செயல்பட நினைத்தும் அது இயலவில்லை என்பதால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம்.
இதன் விளைவாக, நம் இதயப் படபடப்பும் துடி துடிப்பும் நாளும் அதிகரிக்கிறது. இதயம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
இதனால், நம்மில் மிகப் பெரும்பாலோர் மன அழுத்த நோயாலும் இதய நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இதை[நோய்] உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘திமுக’ அரசு உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவது[ராஜினாமா] நல்லது என்று தோன்றுகிறது.
விலகினால், இந்த மாநில நிர்வாகத்தை ஆர்.என். ரவி என்பவர் ஏற்பார்.
தமிழ்நாட்டை ஆளும் அதிகாரத்தைப் பெற்ற பிறகு, இவர் பதவி சுகத்தில் மூழ்கிவிட் வாய்ப்புள்ளதால், இவரால் நம் தமிழினம் இழிவுபடுத்தப்படுவது குறையலாம்.
அதன் விளைவாக, நம்மில் பெரும்பாலோரைத் தாக்கியுள்ள மன அழுத்த நோய்[+இதய நோய்] மேலும் அதிகரிக்காது என்று நம்பலாம்.