வெள்ளி, 27 அக்டோபர், 2023

‘பாலஸ்தீனக் கொடி’... இன்று கோவையில்! நாளை சென்னைக் கோட்டையில்!?!?

பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், அதற்கு முழு ஆதரவை வழங்கி வரும் அமெரிக்க அரசைக் கண்டித்தும், கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் & அரசியல் கட்சிகள்[?] சார்பில் கடந்த 24ஆம் தேதி உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தின் மீது தடையை மீறி ஏறிய சிலர், பாலஸ்தீனத்தின் கொடியைக் கட்டினர். இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் பரவியது.

கொடி கட்டிய 3 பேர் மீது, சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில், மதம் சார்ந்த பல அமைப்புகள் இடம்பெற்றிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பெரும் மதக் கலவரங்கள் ஏதும் இங்கு நடைபெற்றதில்லை.

பெரும்பாலான தமிழர்கள், அமைதியில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்.

பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டதைப் பார்க்கும்போது, அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டத் திட்டமிட்டிருக்கிறார்களா இஸ்லாம் அமைப்பினர் என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று இவர்களின் பாலஸ்தீனக் கொடி ஏற்றம். நாளை.....

இஸ்ரேலை ஆதரித்துக் கிறித்தவர்களும் இந்துக்களும்[இந்தியா இஸ்ரேலை ஆதரிப்பது அறியத்தக்கது] யூதர்களின் கொடியைப் பறக்கவிடுவதும், இஸ்லாமியருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதும் நடைபெறலாம்.

அதன் விளைவாக இங்கு மதக்கலவரம் மூளவும் வாய்ப்பு உள்ளது.

பாலஸ்தீனியர் - யூதர் கலவரம்[போர்] காரணமாக அந்த நாடுகள் பிணக் காடுகளாக ஆகி, அங்கெல்லாம் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

அந்த அவல நிலைக்குத் தமிழ்நாடு உள்ளாக வேண்டும் என்று விரும்புகிறார்களா இஸ்லாம் குடிமக்கள்?

இன்று கோவையில் பாலஸ்தீனக் கொடியைப் பறக்கவிட்டவர்கள் அதைச் சென்னைக் கோட்டையிலும் தில்லிச் செங்கோட்டையிலும் பறக்கவிடுவதும் நடைபெறக்கூடும்.

ஒன்றுகூடிப் பாலஸ்தீன ஆதரவு முழக்கமிட்டவர்களில் மூவரை மட்டும் கைது செய்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை.

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, உரிய மரியாதையுடன் அவர்களை இஸ்ரேலுக்கு நாடுகடத்தலாம் என்பது நம் பரிந்துரை.

கடத்தினால்.....

அங்கும் பாலஸ்தீனக் கொடியைப் பறக்கவிட்டு, பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களை எழுப்பி, இஸ்ரேல் அரசைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள் அவர்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

வாழ்க இஸ்லாம்! வளர்க உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர் ஒற்றுமை!!