பக்கங்கள்

புதன், 25 அக்டோபர், 2023

முற்றிலுமாய் அழிந்தொழியுமா மனித இனம்? அழிந்தால்.....!

 

திருமணமாகி மூன்று அல்லது, ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே உடலுறவு மீதான நாட்டம் குறைந்துவிடுகிறது என்பது மனித இனத்தவர் அனைவருக்குமே அதிர்ச்சி தரும் செய்திதான்.

ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களின் வீரியம் குறைந்துவருவதாக, அவ்வப்போது உலகெங்கும் உலாவரும் திகிலூட்டும் தகவல்கள் நம் நினைவுக்கு வருகின்றன.

அந்தரங்க உறவிலான ஆர்வம் குறைந்துவருவதற்கு இந்த விந்தணுக் குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.

முன்பு, தாம்பத்தியம் மீதான ஆர்வம் குறைவதற்கான ‘கால எல்லை’ 10 > 15 ஆண்டுகள் என்றிருந்த நிலை மாறி, இப்போது 03 > 05 ஆகச் சுருங்கியிருப்பது, காலப்போக்கில் 01 > 02, 00 > 01 என்றெல்லாம் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் உடலுறவில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாத ஆபத்தான நிலையை மனித இனம் எதிர்கொள்ள நேரிடும்.

நேர்ந்தால்.....

மனிதர்கள் இனவிருத்தி செய்வது முற்றிலுமாய்த் தடைபடும்; இனம் முற்றிலுமாய் அழிந்துபோகும் என்பது உறுதி.

இந்த அழிவு நினைந்து நினைந்து வருந்துதற்கு உரியதா?

அல்ல; அல்லவே அல்ல.

மனித இனம் என்பது இருந்துகொண்டே[இப்போதைக்கு] இருப்பது என்றாலும், எந்தவொரு தனிமனிதனும் இருந்துகொண்டே இருப்பதில்லை; உருத்தெரியாமல் அழிந்துபோவது இயற்கை

தான் ஒருவன் இல்லாமல்போன பிறகு இருந்துகொண்டிருக்கும் தன் இனம் குறித்து அவனால் சிந்திக்க இயலாது.

ஆகையினால், காலப்போக்கில் மனித இனம் அழிவது உறுதி என்றாலும், அது குறித்து மனித மந்தைக்குள் தனித் தனி மனிதர்களாக வாழும் நாம் கவலைப்பட ஏதுமில்லை! 

மனித இனம் ஒன்றே என்றாலும் அது தனித் தனி மனிதர்களால் ஆனது என்பதையும், தனி மனித அழிவைத்தடுக்க இயலாத நம்மால், என்றேனும் ஒரு நாள் ஒட்டுமொத்த மனித இனம் அழிவதையும் தடுக்க இயலாது[கவலைப்படவும் தேவையில்லை] என்பதையும் நினைவுகூர்க.