‘யூதர்-இஸ்லாமியர் போர்’ தொடர்பான புதிய செய்திகளை ஊடகங்களில் தேடியபோது, ‘கீமோதெரபி’ குறித்த ஒரு சுருக்கக் கட்டுரை என் கவனத்தை ஈர்த்தது.
வாசிப்பு பயன் தருவதாக அமைந்தது.
என்னைப் போலவே இது குறித்து அறிந்திராதவர்களுக்காக இந்தப் பகிர்வு.
கட்டுரையை, கருத்துகள் சிதைவுறாத வகையில் சிறு சிறு பத்திகளாகப் பிரித்துள்ளேன். சில தொடர்கள் சற்றே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒற்றுப் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
*கீமோதெரபி என்பது புற்றுநோய் எனப்படும் கேன்சர் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறையாகும்[Chemotherapy Abbreviation Chemo is a highly recommended treatment method by doctors for cancer patients].*இவ்வகையான சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கேன்சர் செல்களின் பெருக்கத்தைக் குறைக்கவும் அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கவும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் சக்தி வாய்ந்தவையாகும்.
*மருந்துகள், மாத்திரைகளாகவும், கேப்ஸ்யூல்களாகவும், திரவ வடிவிலும் வாய்வழியாக அளிக்கப்படுகின்றன; ஊசிகள் மூலம் நரம்பு வழியாகவும் செலுத்தப்படுகின்றன; சிலருக்குத் தோலின் மேற்பூச்சாகவும் அளிக்கப்படுகின்றன.
*அறுவைச் சிகிச்சைக்கு முன் புற்றுநோய்க் கட்டிகளின் அளவைச் சுருங்க வைக்கவும், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உடலில் கேன்சர் செல்கள் மீதமிருந்தால் அவற்றை முற்றிலுமாக நீக்கவும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கவும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*நோயை முழுமையாகக் குணப்படுத்துவது சாத்தியமில்லாத நிலையில் நோய் தீவிரமாதலைத் தடுப்பதற்கும் இவ்வகையான சிகிச்சை முறை தேவைப்படுகிறது.
*கீமோதெரபி சிகிச்சை நாளொன்றுக்கு ஒரு முறை என்று சில/பல வாரங்கள்வரை தொடர்ச்சியாகவோ, இரண்டு மூன்று வாரங்கள் என இடைவெளி விட்டோ அளிக்கப்படுகிறது.
*இந்தச் சிகிச்சை பல நன்மைகளை அளிக்கிறது எனினும், சில பக்க விளைவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.
*கீமோதெரபி கேன்சர் செல்களை மட்டும் அழிக்காமல் ஆரோக்கியமான செல்களையும் அழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க தீமையாகும்.
*மேலும், சோர்வு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், பசியின்மை, முடி உதிர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இவை நோயின் தன்மையையும் சிகிச்சை முறையையும் பொருத்து மாறுபடக்கூடும்.
*பெரும்பாலான நோயாளிகளுக்கு நோயின் தொடக்க நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் அது நோயின் பிடியிலிருந்து முழுவதுமாக விடுபட ஏதுவாக அமையும்.
* * * * *
உதவி:
https://tamil.oneindia.com/news/chennai/what-is-chemotherapy-392552.html?story=3