“அயோத்தி ராமர் கோவில் பூஜையில், மோடியின் 'பிரதமர்' என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரைப் பின்பற்றியது இல்லை. குறிப்பாக, அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை” [https://www.maalaimalar.com/news/national/tamil-news-subramanian-swamy-tweet-699429].
மேற்கண்ட கருத்துரை, ‘பாஜக’ கட்சிக்காரரான டாக்டர் சுப்பிரமணியன் சாமி அவர்களால் வெளியிடப்பட்டது.சாமி சொல்வது போல, பிரதமர் மோடி, பிரதமர் பதவிக்குத் தகுதி அற்றவராகவோ, ஒழுக்க சீலர் என்று ராம பக்தர்களால் போற்றப்படுகிற ராமச்சந்திர மூர்த்தி வகுத்த பொதுவான வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றாதவராகவோ இருந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை; ஊர் உலகமும்[மோடி உட்பட] அதைப் பெரிதுபடுத்த வாய்ப்பில்லை.
ஆனால்.....
‘தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது மனைவியிடம் அவ்வாறு அவர் நடந்துகொள்ளவில்லை’ என்று கூறியிருப்பதில் விபரீத அர்த்தம் புதைந்திருக்கிறதே, அதை அறிந்தால் மோடியால் கலைப்படாமல் இருக்க முடியுமா?
சீதை ராமனின் மனைவி. அந்தத் தன் மனைவிக்கு அவன் ஒருபோதும் துரோகம் செய்ததில்லை[பக்தர்கள் நம்பிக்கை], அதாவது பிற பெண்கள் மீது ஆசைப்படுபவனாக நடந்துகொண்டதில்லை. இங்கு சு. சாமியின் கருத்து, நம் பிரதமர் இது விசயத்தில் தன் மனைவிக்குத் துரோகம் செய்தவர்[பிற பெண்களை நாடியவர்] என்று எண்ணத் தூண்டுகிறது.
இது விசயத்தில், சு.சாமியின் துணிச்சல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அதே வேளில்.....
நம்மைப் போன்ற சாமானியர்கள், மோடியை ஒழுக்கம் கெட்ட மனிதர் என்று சொல்லியிருந்தால், மோடி கடும் சீற்றத்திற்கு உள்ளாகியிருப்பார். அவரின் ஆணைப்படி காவல்துறை நம்மை ‘உள்ளே’ தள்ளிக் கம்பி எண்ணவைத்திருக்கும். நம் மீது வழக்கு தொடுக்கப்படலாம். வழக்குப் போடப்படாமல் குண்டர் சட்டம், தடியர் சட்டம் என்று ஏதேனும் ஒரு சட்டம் நம் மீது பாய்ந்திருக்கும்.
டாக்டர் சுப்பிரமணியன் சாமி அவர்கள் மிகப் பிரபலமான மனிதர்; ஆளும் பாஜக கட்சிக்காரர்; படு பயங்கரப் புத்திசாலியும்கூட!
மெத்தப் படித்த இந்தப் பெரிய மனிதர் மீது நாட்டை ஆளும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பாரா?
எடுப்பாரோ அல்லவோ, டாக்டர் சாமியின் அபாரத் துணிச்சலைப் பாராட்டுவோமா?
ஊஹூம்... நமக்கெதுக்குங்க ஊர் வம்பு! ஹி... ஹி... ஹி!!!
Modi is muscling into the Prana Prathishta Puja, when his PM status is a zero in the Puja, nor has he followed Bhagwan Ram in his personal life especially in his behaviour to his wife, nor he has acted as per Ram Rajya as PM during the last decade.
இடுகையை மொழிபெயர்
முற்பகல் 8:51 · 22 ஜன., 2024·705.9ஆ பார்வைகள்