மூதாட்டிகள்[100 வயசுப் பாட்டி உட்பட!!!] வன்புணர்வு செய்யப்படுவது, அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது குறித்த சில நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக அண்மையில் அறிய நேர்ந்தது. இந்த அவலங்கள் அரிதானவையா, தொடர்ந்து நிகழ்ந்துள்ளனவா என்பதை அறியும் ஆர்வம் காரணமாக.....
கூகுள் ‘தேடல்’[Search]இல், ‘மூதாட்டிகள் வன்புணர்வு’ என்னும் தலைப்பை உள்ளிட்டுத் தேடினேன்.
முதல் கட்டமாக 137[உங்களுக்கு மிகவும் தொடர்புடைய முடிவுகளைக் காண்பிக்க, ஏற்கனவே காண்பிக்கப்பட்ட 137 ஐப் போன்ற சில உள்ளீடுகளைத் தவிர்த்துள்ளோம். விரும்பினால், தவிர்க்கப்பட்ட முடிவுகளையும் சேர்த்து மீண்டும் தேடலாம்] தளங்களுக்கான பட்டியல் கிடைத்தது.
இந்தக் காமமே மனிதர்கள் புரியும் குற்றங்களில் பெரும்பாலானவற்றிற்குக் காரணமாக உள்ளது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களின்[பதின் பருவத்தினர் முதல் படு படு கிழங்கள்வரை] கட்டுப்படுத்தப்படாத காமத்தால் குடு குடு கிழவிகளே மாளாத துயரங்களுக்கு உள்ளாகிறபோது இளம் பெண்களின் நிலைமை விவரிப்புக்கு அப்பாற்பட்டதாகும்.
இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தனிமையில் வசிக்கும் மூதாட்டிகளே காமுகர்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதுதான்.
ஆகவே, மூதாட்டிகளின் பாதுகாப்பு குறித்து அரசு/அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது[மனநல மருத்துவர்கள் & சமூக நல ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து, குழுவினர் வழங்கும் பரிந்துரையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம்] உடனடித் தேவை ஆகும்.
மாறாக, நடுவணரசும் மாநில அரசுகளும் இதைக் கட்டுப்படுத்துவதற்கான, அல்லது மட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால்.....
புதைக்கப்பட்ட பெண்களின்[கிழவிகள் உட்பட] சடலங்களைத் தோண்டியெடுத்து[ஏற்கனவே நிகழ்ந்துள்ளன]ப் புணரும் பயங்கரங்கள் பரவலாக நிகழுக்கூடும்!
மூதாட்டிகள் வன்புணர்வு-பட்டியல்: