அம்மாக்காரி[மினாட்சி] குளிக்கும்போது தன் உடம்பின் அழுக்கைத் திரட்டி[கடவுள்களுக்கும் உடம்பு உண்டா? அதில் அழுக்குச் சேருமா? கேனயன்களா, சிந்தியுங்கடா] ஒரு குழந்தையை உருவாக்கிக் காவலுக்கு வைத்தாள்.
அபோது அங்கு வந்த அவளின் புருஷன்காரர்[ஈஸ்வரன்>அவர் விந்துவில் உருவாகாததால் அவருக்கு விநாயகன் பிள்ளையல்ல] குளியலறைக்குள் நுழைய, அழுக்குப் பிள்ளை[பிறந்தவுடனே காவல் பணி புரிந்ததாம்] தடுத்தது.
சினம் கொண்ட சிவனானவர் அதன் தலையை வெட்ட, குய்யோமுறையோன்னு அம்மையார் கதறி அழ, ஒரு யானையின் தலையை[இது தனிக் கதை] குழந்தை உடம்பில் ஒட்டவைத்தார் முழுமுதல் கடவுள்.
அம்மையும் அப்பனும் இணைந்து உருவாக்கிய பிள்ளையாரின் பிறந்த[பிறக்கவில்லை; உருவாக்கப்பட்டான்] நாளைத்தான் ஆண்டுதோறும் ‘விநாயகர் சதுர்த்தி’ என்னும் பெயரில் கொண்டாடிக் குதூகலிக்கிறது மூளை மழுங்கிய பெரும் கூட்டம்.
ஏனையோரை முட்டாள்கள் ஆக்கி, அவர்கள் தயவில் உழைக்காமலே பிழைப்பு நடத்தும் ஒரு சுயநலக் கும்பலின் சதி வேலை எது.
அவர்கள் அன்று முதல் இன்றுவரை புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை கூமுட்டைகளாகவே இருக்கிறார்கள் பெரும் எண்ணிக்கையிலான நம்மவர்கள்!
ஆளுவோர் எவரும் நம்மவர்களின் அவல நிலை குறித்துக் கவலைப்படுவதில்லை, அவர்கள் 'அவர்கள்’இன் ஆயுட்கால மெய்க்காப்பாளர்கள் என்பதால்!!