பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 4 டிசம்பர், 2023

சக்திதான் கடவுளா?

'இந்தப் பிரபஞ்சத்தை ஒரு சக்திதான் படைத்திருக்க வேண்டும். இந்த சக்தியைத்தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம்.’ -https://curioushats.com/ta/articles/common-questions/does-god-exist/

‘பிரபஞ்சத்தின் உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவுக்குச் சக்தியே காரணம்’-https://meridianuniversity.edu/content/the-role-of-shakti-in-hinduism

சக்திதான் கடவுளா?

//பொருள்களின் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கும் சக்தியைப் பொருள் நீக்கிக் காணுதல், அறிதல், ஐம்புலன்களால் உணர்தல் என்பது எவ்வகையிலும் சாத்தியமில்லை. சக்தியாகிய கடவுளைக் காணுதலும் சாத்தியம் இல்லாமல்போகும். அனைத்தையும்[சக்தி உட்பட] படைத்தவர் கடவுளே என்னும் கருத்தாக்கத்திற்கு இது முரணாக அமையும்.

பொருள்கள் இல்லாமல், ரேடியோ அலைகள் மூலமும், ஒளி, கதிர்வீச்சுகள் போன்றவற்றின் மூலமும் ‘சக்தி’[தனித்து] இயங்க  முடியும் என்றாலும் அது கடவுள் ஆகாது. சக்தி மட்டுமல்லாமல், பிறவற்றையும் கடவுளே படைத்தார் என்னும் கோட்பாட்டின்படி, சக்தியும் கடவுளும் ஒன்றல்ல என்பது உறுதியாகிறது// -இது கூகுள் ‘தேடல்’இல் கிடைத்த, ‘சக்தியே கடவுள்’ என்பதற்கான மறுப்புரை.

கிறித்தவர்களின் கடவுள் கோட்பாடும் இதுவே. ஆதாரம்:

பைபிளின் முதல் வசனம், ஆதியாகமம் 1:1, கடவுள் அனைத்துப் பொருள்கள், ஆற்றல் என்றிவை உட்பட. எல்லாவற்றையும் படைத்தார் என்று கூறுகிறது[ஆனாலும், அவர் சக்தியாகவும், பொருளாகவும், எல்லாம் ஆகவும் இருக்கிறார்] - The first verse in the Bible, Genesis 1:1 tells us that God has created everything – including all matter and energy[‘The first verse in the Bible, Genesis 1:1 tells us that God has created everything – including all matter and energy. This means that God can't be identical to the universe, nor can He be identical to any aspect of the universe. Since energy is part of the created universe, we must conclude that God can't be energy.’ -https://www.google.com/search?q=diferences+between+energy+and+God&rlz=1C1UEAD_enIN1070IN1070&oq=diferences+between+energy+and+God&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgWGB4yCAgCEAAYFhge0gEJNzUxODRqMGo0qAIAsAIA&sourceid=chrome&ie=UTF-8 -13 நவ., 2018  -google

மேலும் ஒரு மேற்கோள்:

கடவுள், ஆற்றல், அறிவு போன்றவற்றில் நம் அனைவரையும் விட உயர்ந்தவர்[God is a superior to all of us in His power[அவருடைய சக்தி என்பதால், அவர் வேறு, சக்தி வேறு என்றாகிறது. மாறுபட்ட விளக்கத்திற்கும் இடமுண்டு], Knowlege etc]. -https://www.allinterview.com/showanswers/58408/there-god-and-difference-between-energy-in-space-and-so-called-goddly-energy.html

ஆக.....

இந்தச் சிறு குறு ஆய்வின் மூலம் பொருள்கள், விண்ணக அலைகள், கதிர்வீச்சுகள் என்று அனைத்தையும் படைத்தவர் கடவுளே என்பதும், படைப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு முன்பு அவர் மட்டுமே இருந்துகொண்டிருந்தார்[இது எப்படிச் சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புபவர்கள் பாவிகள்; அயோக்கியர்கள்] என்பதும் அறியப்படுகின்றன.

இவர் இப்படி எத்தனை எத்தனை எத்தனை யுகங்களாக, ‘வேலை வெட்டி’ எதுவும் இல்லாமல், தனிமையில் தவித்துக்கொண்டிருந்திருப்பார்[செம போர்] என்று யோசித்தால் மண்டை காயும்; மூளை மழுங்கும். ஆகவே.....


காலத்தை விரயமாக்கும் இந்தக் கருமாந்தரக் கடவுள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அன்றாடக் கடமைகளில் முழுக் கவனம் செலுத்துமாறு  பணிவுடனும் அன்புடனும் வேண்டுகிறேன்.


வாழ்க மனித இனம்! வளர்க மனித நேயம்!!