செவ்வாய், 5 டிசம்பர், 2023

“படுத்துடு... அது தணிய வேறு வழியில்லை”!

பாலியல், காதல், நம்பிக்கைத் துரோகம் போன்றவை குறித்து எழுதியதால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் மலையாளப் பெண் எழுத்தாளர் கமலாதாஸ். மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் போட்டு உடைத்தவர். பிரமிக்க வைக்கும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர். ஏராளமான பரிசுகளைப் பெற்ற இவர் உலக அளவில் நன்கு அறியப்பட்டவரும்கூட.

இவருடைய ‘தாபம்’ சிறுகதையில் இடம்பெற்ற உரையாடலின் ஒரு பகுதி[மட்டும்] கீழே. 

வாசியுங்கள்;  உற்ற நண்பர்களுடன்[நண்பிகளுடனும்தான்] அவசியம் பகிர்வீர்கள்: மனம் திறந்து விவாதிப்பீர்கள்.


* * * * *

“உஷா’, நீ எனக்கு உதவினா, என்கூட எப்பவும் இருக்கிறதா இருந்தா, நான் காலப் போக்குல தாராவை மறந்துடுவேன்.”


“இல்ல ஹரி. உங்க மனசில் எப்பவும் தாரா இருந்துட்டுதான் இருப்பா. உங்க மனசை விட்டுத் தாராவோட உருவம் மறையவே மறையாது. அவகூட நீங்க படுக்கல. அதனாலதான் அவளைப் பற்றிய நினைவுகள் இந்த அளவுக்குப் பலமா மனசுல இருந்திட்டிருக்கு. அமெரிக்காவிலோ ஸ்வீடனிலோ நாம இருக்கிறதா இருந்தா நான் என்ன சொல்வேன் தெரியுமா? எவ்வளவு சீக்கிரமா அவகூடப் படுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படுங்கன்னு சொல்லியிருப்பேன். ஆசை முழுசா அடங்குறதுக்கு வேற வழியே இல்லை. காமம்கிறது ரொம்பப் பழமையானது. அது உண்டாக்குற பிரச்சினைக்குப் பழமையான ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு. அது என்ன தெரியுமா? அவளை எங்கேயாவது கடத்திட்டுப் போயி அவகூடப் படுக்கிறதுதான்.”


“நான் அவளைப் பலாத்காரம் பண்ணினா அவள் என்னை வெறுக்க ஆரம்பிச்சிட மாட்டாளா?”


“பலாத்காரம் செய்த மனிதனையே விரும்பத் தொடங்கிய பல பெண்களை நான் பார்த்திருக்கேன். சொல்லப் போனா பலாத்காரம்கிறது முகஸ்துதி செய்யுற மாதிரி.”


“உஷா, உன்னோட வார்த்தைகளை என்னால் முழுசா ஏத்துக்க முடியாது. தன்னைக் கற்பழிச்சவனைத் தாரா ஒருபோதும் மன்னிக்க மாட்டா. அவ ரொம்பவும் குடும்பத்தனமான பொண்ணு. கோயிலுக்குப் போய்ட்டு, நெத்தியில் சந்தனம் வச்சிகிட்டுத் திரும்பி வர்றப்போ எப்படி இருப்பா தெரியுமா? தெய்வீகக்களைன்னு சொல்வாங்களே, அவ முகத்திலயும் உடம்புலயும் அது இருப்பதைப் பார்க்கலாம்.”


“தெய்வீகக்களை! எந்த அளவுக்குப் பொய்யான வார்த்தை அது தெரியுமா? இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆண்கள் பெண்களை ஏமாத்திட்டு வர்றாங்க.


                                                             *   *   *   *   *

//அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயதுச் சிறுமி நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தாள். இன்று அவளுக்குப் ‘புனிதச் சடங்கு’. இந்தச் சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்குச் செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு. கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை// -கமலாதாஸ். 

                                                 

                                         *   *   *   *   *

* * *கமலாதாஸ் 2009இல் காலமானார். இது மலையாளிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும்.