பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 6 டிசம்பர், 2023

சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட காஷ்மீரும், அவற்றைப் பெறத் தவறிய மாநிலங்களும்!!!

 

ஜம்மு & காஷ்மீரில் வசிப்பவர்கள் மற்ற இந்தியர்களுடன் ஒப்பிடுகையில் குடியுரிமை, சொத்துரிமை, சில அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைத் தனியான சட்டங்கள் மூலம் முன்பு பெற்றிருந்தனர்[https://byjus.com/free-ias-prep/special-status-of-jammu-and-kashmir/] என்பது அறியத்தக்கது.

பிற மாநிலத்தவர் காஷ்மீரில் குடியுரிமை பெறுவதோ, சொத்துகள் வாங்குவதோ, அவர்களுக்குள்ள வேறு சில உரிமைகளைப் பெறுவதோ சாத்தியம் இல்லாமலிருந்த நிலையில், அதை மாற்றியமைத்தார் மோடி என்பதைத்தான் மேற்கண்டவாறு பேசி[பட நகல்]ப் பெருமைப்பட்டிருக்கிறார் அமித்ஷா.


உண்மையில் காஷ்மீர் மக்களோ, அங்குள்ள கட்சிகளோ மோடியின் நடவடிக்கையை எதிர்த்து அமைதி வழியில் போராடினார்களோ இல்லையோ, கலவரம் அல்லது போர் ஏதும் நிகழ்த்தாதபோது[காஷ்மீரைத் தனி நாடாக்கச் சில குழுக்கள் தொடர்ந்து போராடுவது தனி ஆய்வுக்குரியது] அமித்ஷா இப்படிப் பழைய நிகழ்வை நினைவுபடுத்தியதன் உள்நோக்கம் நமக்குப் புரியவில்லை.


மாநில சுயாட்சியை விரும்பிய[விரும்பும்?] மாநிலத்தவர் அமைதி வழியில் ஒருங்கிணைந்து போராடி[‘கலவரம்’ அல்ல. நாட்டின் பாதுகாப்பு, அயல்நாட்டுத் தொடர்பு, பொது நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரம் போன்றவை நடுவணரசின் வசம் இருப்பது மிக மிக முக்கியம்] மாநில சுயாட்சியைப்[முன்பு காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து உட்பட] பெற்றிருந்தால்..... 


*அனைத்து மாநிலங்களிலும் இந்துத்துவா திணிப்பும் இந்தித் திணிப்பும் நிகழ்ந்திரா.


*கல்வித்துறை நிர்வாகம், வரிவிதிப்பு அதிகாரம், நியமனங்கள் போன்றவற்றில் மாநிலங்கள் பெற்றிருந்த உரிமைகளில் பல மத்திய அரசால் பறிக்கப்பட்டிரா.


*வங்கிகள், போக்குவரத்து, அஞ்சல்துறை போன்றவற்றிலும் பிறவற்றிலும் அயல் மாநிலத்தவரைத் திணித்து, தத்தம் மாநிலத்தை ஆளும் உரிமை பெற்ற இனத்தவரைச் சிறுபான்மையினர் ஆக்கும் சித்து வேலைகளை மோடி & அமித்ஷா கூட்டணி வம்படியாய்ச் செய்திருக்க முடியாது.


*காஷ்மீரிகளுக்கு இருந்த சில சிறப்புரிமைகளைப் பறிக்கும் அவசியமும் ஏற்பட்டிருக்காது.


*அமித்ஷா போன்றவர்களுக்கு மேற்கண்டவாறு பெருமை பீத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்திருக்காது.


*சிறுபான்மையினர்[மதம்&இனம்] மனம் வெந்து புழுங்கும் அவலம் நேர்ந்திருக்காது.


இந்தியா ஒரே நாடுதான் என்றாலும், பல இனத்தவரும் மதத்தவரும் வாழும் மாநிலங்களை உள்ளடக்கியது என்பதைக் கருத்தில்கொண்டு, அவற்றிற்கு இருந்த/இருக்கும் அதிகாரங்களைப்[உரிமைகள்] பறிக்காமல் கூடுதல் அதிகாரங்கள் வழங்கினால் ஒருமைப்பாடு வலுப்பெறும் என்பது நம் எண்ணம்; அழுத்தமான நம்பிக்கையும்கூட.


இப்படிக்கு, 


இன்றும் என்றென்றும் தமிழனாகவும் இந்தியக் குடிமகனாகவும் வாழ விரும்பும் ஒரு சாமானியன்.

                                  *   *   *   *   *

'ஒரு நாட்டிற்கு இரண்டு பிரதமர்கள், இரண்டு அரசியலமைப்புகள், இரண்டு கொடிகள் எப்படி இருக்க முடியும்? இதை செய்தவர்கள், தவறு செய்துள்ளனர்.' 

https://www.dailythanthi.com/News/India/how-can-a-country-have-two-pms-says-shah-on-

jk-reservation-bills-in-lok-sabha-1084964?infinitescroll=1


***நம் கேள்வி:

‘பிரதமர்’ தலைமை நிர்வாகியைக் குறிக்கும் ஒரு சொல்[அதற்கு வேறு எந்த மரியாதையும் இல்லை]. இந்தியாவின் தலைமை நிர்வாகி பிரதமர் என்றால், மாநிலத்தின் தலைமை நிர்வாகியை[முதல்வர்]ப் பிரதமர் என்று அழைப்பதில் என்ன தவறு”


ஒரு நாட்டிற்கு ஒரு கொடிதான் என்கிறார் அமித்ஸா. ஒவ்வொரு மாநிலமும் ஒரு கொடி வைத்திருந்தால்[கர்னாடகாவில் உள்ளது] ஒன்றிய அரசின் கொடியின் மதிப்புக் குறைவது  எப்படி?