எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 6 டிசம்பர், 2023

மோடி[பிரதமர்] இங்கே! கடவுள் எங்கே... எங்கே... எங்கே?!

 

செல்லும் இடமெல்லாம் பெரிய மனிதர்களுக்குச் கறுப்புச் சட்டைப் பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள்.

அவர்களின் துணை இல்லாமல் நிம்மதியாக வீட்டில் உண்ணவும் உறங்கவும்கூட முடிவதில்லை.

வினாடிப் பொழுதுகூட அவர்கள் தன்னிச்சையாய்த் தனித்து இயங்குவது சாத்தியமே இல்லை.

வேடிக்கை என்னவென்றால், காலமெல்லாம் பக்தி நெறி பரப்பும் பரிசுத்தப் பக்திமான்களான அவர்கள் கோயிலுக்குச் சென்று அவரை வழிபடும்போதுகூட, கண்ணுங்கருத்துமாகச் சட்டைக்குள் கைத்துப்பாக்கியுடன் அவர்கள் காவல்புரிகிறார்கள். இது ஏன்?

கடவுள் என்ன செய்கிறார்?

என்னதான் செய்துகொண்டிருக்கிறார்!?

*   *   *   *   *