எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

நஞ்சு நீக்கும் இஞ்சி! தினமும் தின்றால் தீரும் பல நோய்கள்!!

தினமும் உணவில் இஞ்சியைச் சேர்ப்பதால் பல நன்மைகள் விளைகின்றன. https://www.tips-and-tricks.co/health/happens-body-eat-ginger/2/

ஒரு பெரிய துண்டு இஞ்சியை[சுமார் 1.5 சென்டிமீட்டர்]ச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தேநீரில் ஊறவைத்துப் பருகுங்கள்; அல்லது உணவுடன் கலந்து உண்ணுங்கள். அதனால் விளையும் நன்மைகள் பல.

*உடலில் ஏற்படும் வீக்கம் வேகமாகக் குறையும். இதற்கு, இஞ்சியின் ‘அழற்சி எதிர்ப்பு விளைவு’ காரணமாகும்.

*தினமும் உணவுடன் இஞ்சி சேர்த்தால் குமட்டல் பிரச்சினை தீரும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களும் கீமோதெரபிக்கு உட்பட்டவர்களும் இதன் மூலம் குணம் பெறலாம்.

*இஞ்சி சேர்ப்பதால் உடல் வலி படிப்படியாக அகலும்.

*இது குடல் இயக்கத்திற்கு மிகவும் நல்லது. தொடர் மலச்சிக்கலைப் போக்கும்.

*இஞ்சி சேர்ப்பது மசாலா வலி மருந்துகளை எடுத்துக்கொள்வதைப் போன்றது என்பதால் கடுமையான வயிற்று வலியைப் போக்க இது உதவும்.

*ஒரு மாதத்திற்குத் தினமும் உணவில் இஞ்சி சேர்ப்பது உடலில் உள்ள ‘கெட்ட’ கொழுப்பைக் குறைக்க உதவும். 

*இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின்[தேவைக்கு அதிகமான கொழுப்பால் உருவாவது] அளவு இஞ்சியில் உள்ள பொருட்களால் குறைக்கப்படுகிறது.

*இஞ்சியில் உள்ள ‘அழற்சி எதிர்ப்புப் பண்புகள்’ நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன. 

*சளி அல்லது வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை இஞ்சி நீக்குகிறது.

ஆகவே, இஞ்சியை உணவோடு சேர்த்து உண்பதில் கொஞ்சமும் தயக்கம் காட்டாதீர்!

குறிப்பு:

கட்டுரையின் ‘வழவழா’ தொடர்கள் நம் மொழி மரபுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு, சுருங்கிய வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.