திங்கள், 12 ஆகஸ்ட், 2024

கண் நீர் அழுத்த நோய்[Glaucoma]... பார்வை பறிபோவதைத் தடுக்க.....

Glaucoma என்பது கண் நீர் அழுத்த நோய் ஆகும்.

கண்ணில் உள்ள ’நீர் அழுத்தம்’ அதிகரித்துப் ‘பார்வை நரம்பு’ சேதம் அடைவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

கிளௌகோமாவால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுப்பது இயலாது; முழுமையாகக் குணப்படுத்துவதும் சாத்தியமில்லை. ஆனால், சிகிச்சைகள் மூலம் இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

நீர் அழுத்தத்தைக் குறைக்கக் கண்ணுக்கான சொட்டு மருந்து பயன்படுத்தப்படுகிறது.

பிமாட்டோபிரோஸ்ட் அல்லது லட்டானோபிரோஸ்ட் போன்ற குறைந்த வலிமை கொண்ட சொட்டுகள் இதில் அடங்கும். இவை வேலை செய்யவில்லை என்றால், ‘டிமோலோல்’ போன்ற சக்திவாய்ந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

லேசர் தொழில்நுட்பம் மூலமும் சிகிச்சை அளிக்கிறார்கள். 

எவ்வளவுதான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க முடியாது என்பதால், முற்றிலுமாய்ப் பார்வை பறிபோகாமலிருக்க[வருமுன் காத்தல்] முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

*ஆண்டுதோறும் விரிவான கண் பரிசோதனைகள்.

*உடற்பயிற்சி[https://www.dragarwal.com/ta/blog/eye-wellness/simple-eye-exercises-that-will-improve-your-vision-and-eyesight/ இந்த முகவரியைக் கிளிக் செய்து கண்களுக்கான பயிற்சி பற்றி அறியலாம்]

*ஆரோக்கியமான உணவுமுறை.

*புகைப் பழக்கத்தைத் தவிர்ப்பது.

*இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருத்தல். 

While glaucoma can’t be cured or prevented, there are lifestyle changes that can help slow disease progression, including:

Annual comprehensive eye exams

Exercise

A healthy diet

Not smoking

Blood sugar and pressure control

5 Types of Glaucoma: Symptoms, Risk, and Treatment Options (visioncenter.org)

* * * * *

இந்நோய் குறித்த விரிவான தகவலுக்கு.....

https://aravind.org/diseases/glaucoma_tamil/