அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 31 ஜூலை, 2020

ஆறறிவுப் பித்தர்கள்!!!

நியாண்டர்தால் மனிதர்கள் க்கான பட முடிவு
உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

இவ்ற்றின்  தோற்றம் நிகழ்ந்து 3500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்கிறது அறிவியல்[புவியில் உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கிடையே தோன்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது[விக்கிப்பீடியா. 1பில்லியன் =1000 கோடி].

அன்றிலிருந்து இன்றுவரை, வலிய உயிர்கள் வலிமை குன்றிய உயிர்களைத் தாக்கித் துன்புறுத்துதலும், உணவாக்கி உயிர் வாழ்தலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இது இயற்கை எனின், இது குறித்துத் தம் ஆய்வைத் தொடர்வது அறிவியலாளர் கடமை.

ஒன்றை மற்றொன்று உண்டு உயிர் வாழ்தல் இயற்கையல்ல; கடவுளின் படைப்பே இவ்வகையிலானதுதான் எனின், அவரின் செயல்பாடு கேள்விக்குரியதாகிறது. அவரைக் கருணை வள்ளல் எனப் புகழ்வது எள்ளுதற்குரியதாகிறது.

வாழும் சூழலுக்கேற்பத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளாததால் அழிந்தொழிந்த உயிரினங்கள் ஏராளம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அவற்றைப் படைத்தவரும் இவரே. அழியவிட்டவரும் இந்த  அருளாளரே. 

கொஞ்சம் சிந்தித்தாலே, கடவுள் எத்தனைக் கொடூரமானவர் என்பது புரியும்.

மனித இனம் தோன்றி முன்பின்னாகப் பத்து லட்சம் ஆண்டுகள்[பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது -விக்கிப்பீடியா] இருக்கலாம் என்கிறார்கள் மானிட இயல் ஆய்வாளர்கள்.

மனிதர்கள் கடவுள் குறித்துச் சிந்தித்துத் துதிபாட ஆரம்பித்தது அதிகபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து எனலாம்[ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் நியாண்டர்தால் மனித இனத்தவருக்குத் இறைச் சிந்தனை இருந்தததாக நம்பப்படுகிறது -விக்கிப்பீடியா]

ஆண்டுக் கணக்கு எதுவாகவோ இருக்கட்டும், அன்று முதல் இன்றுவரை தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் உற்ற துன்பங்களையும், அவற்றில் பலவற்றிற்கு நேர்ந்த பேரழிவுகளையும் கண்டுகொள்ளாத கல் மனம் கொண்ட கடவுளை வழிபட்டால், துயரம் களையலாம்; சுகவாழ்வு பெறலாம் என்று மனிதர்கள் நம்புவது நகைப்புக்குரிய செயலாகும்.

இவர்களை ஆறறிவு மனிதர்கள் என்பதற்கு மாறாக, ஆறறிவுப் பித்தர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
=====================================================================