“மங்களகரமான நிகழ்விற்கு[அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு] சாட்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம். அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளக் கடவுள் என்னைத் தேர்வு செய்திருக்கிறார். இதை மனதில் வைத்து 11 நாட்கள் சிறப்பு[!?]ப் பிரார்த்தனைப் பயிற்சியை[பிரார்த்தனை செய்யப் பயிற்சியா என்று எவரும் கேள்வி எழுப்பாதீர்] மேற்கொள்வேன்” என்று அறிவித்திருக்கிறார் நம் பிரதமர் மோடி.*
ஒரு நாள் பிரார்த்தனைக்கு 11 நாட்கள், 101 நாட்கள் என்று செலவிட்டால், ஒரு பரந்த பெரிய நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் இவருடைய அன்றாடக் கடமைகளைச் செய்வதில் சுணக்கம் ஏற்படாதா என்று மக்கள் பலரும் கவலைப்படக்கூடும்.
12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் அவதரித்து அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ராமபிரான், மோடி அவர்கள் 11 நாட்களில் ஆற்றவிருந்த பணிகளை[தேங்கிப்போனவை], குடமுழுக்கு[22.10.2024] முடிந்த மறு நாளே செய்துமுடித்திடத் தேவையான ஆற்றலை அவருக்குத் தந்தருள்வார் என்பதை உணர்ந்தால், அது தேவையற்ற கவலை என்பது புரியும்.
வாழ்க நம் பிரதமர் மோடி! வளர்க அவர்தம் ராம பக்தி!!
* * * * *