சாவித்திரி தேவி[51] என்பவர் நடுக்குவாதம்[உடல் உறுப்புகள் நடுங்குதல்] நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உடம்பு விறைத்துக்கொள்ளுதலும் அதிகரித்தது. இதனால், அவரால் நடக்கவோ, திரும்பவோ, படுக்கையிலிருந்து சரியாக எழுந்திருக்கவோ முடியவில்லை.
இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த[பார்கின்சன்] நோயால் அவதிப்பட்டு வந்த இவர், புது தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரது மூளைக்குள் ‘பேஸ்மேக்கர்’ பொருத்தியதையடுத்து, அவர் நோய் குணமானது.
சிகிச்சை முறை:
அறுவைசிகிச்சையில், ‘மின்முனைகள்’ மண்டை ஓட்டில் உள்ள இரண்டு சிறிய துளைகள் வழியாக ஆழமான மூளைக்குள் செலுத்தப்பட்டன.
அறுவைச் சிகிச்சையின்போது பெண்ணின் பேச்சு, கண் அசைவுகள், கைகால்களின் சக்தி ஆகியவை கண்காணிக்கப்பட்டதில் அவர் குணமடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
"அறுவைசிகிச்சையின்போது, அவர் ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்திவிட்டார். எலெக்ட்ரோடுகள் மாற்றியமைக்கப்பட்டதில், அவரால் பேச முடிந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு எலக்ட்ரோட்கள் சரியான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய CT ஸ்கேன் செய்யப்பட்டது. பின்னர் மார்புச் சுவரில் பேட்டரி செருகப்பட்டது."
அறுவைசிகிச்சைக்குப் பிறகு தேவி நல்ல முன்னேற்றம் அடைந்து, மருந்துகளின் பக்கவிளைவுகள் ஏதுமின்றி இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
மேற்கண்ட விவரங்களைச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்[Times Now].
* * * * *