எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 11 ஏப்ரல், 2024

‘ரோடு ஷோ’... ‘ஷோ’ காட்டும் ‘சூப்பர் மேன்’ மோடி!!!

 veeran4h

தமிழ் நாட்டின் தலைவர்கள், தேர்தல் பரப்புரையில் ஆண்ட கட்சி என்றால் தாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்பார்கள் ! கூட்டம் நடத்துவார்கள் ! தெரு முனைப் பிரச்சாரம் செய்வார்கள் ! இது என்னடா புதுசா அழகிப் போட்டில வர மாதிரி... ‘கேட் வாக் மாதிரி... ‘ரோடு ஷோ’ வாம் ....! கேக்கவே நாராசமா இருக்கு! அம்பி அம்பி இது தமிழ் நாடுடா!

1ShareReply

shanmuganathan4h

அதென்ன ரோடு ஷோ....
அது ஒன்னுமில்லீங்க தம்பி...
முன்னெல்லாம் டூ வீலர், கார் எல்லாம் ஷோ ரூம்ல வச்சு விற்பாங்க...
விற்காத வாகனங்களை, வங்கி வாசல்... முக்கியச் சாலைகளில் ஒரு குடையை வைத்து ஒரு டேபிள் போட்டு நாலு பேர் விற்பனை செய்யறாங்கள்ல அது மாதிரிதான்....
செல்லாக் காசான அரசியல் கட்சியும் தலைவர்களும் இப்படித் தெருவுல தங்களையும் தங்கள் கட்சியையும் காட்சிப்படுத்தறதுதான் ‘ரோடு ஷோ’…