நான் கவிதைகளை விரும்பிப் படிப்பதில்லை. படித்தது பிடித்துவிட்டால் எளிதில் மறப்பதும் இல்லை. படியுங்கள்; நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.
புரியாத மந்திரத்திற்கு
வேண்டிக்கொண்டே நூறு ரூபாயைத்
தட்டில் காணிக்கை செலுத்திய
வெள்ளை வேட்டி
வெளியே வருகையில்.....
'அய்யா......சாமீ
தர்மம் பண்ணுங்கய்யா'வின்
விரித்த துணியில்
சட்டைப்பையில் நோண்டியெடுத்து
ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நகர்ந்தபோது
வெளிக்கோபுர மாடமெங்கும்
எதிரொலித்தது
கால் வீங்கிக்கிடந்த
அய்யா.....சாமீயின் குரல்.....
''நீங்க நல்லாருக்கணும் சாமி''
=============================================
கவிதையைப் படைத்த செ.செந்தில்மோகன் அவர்களுக்கும், பிரசுரித்த 'குங்குமம்'[18.05.2018] வார இதழுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்!
கவிதை வரிகள் மிகவும நன்று ரசித்தேன் என்று சொல்வது பாவம்.
பதிலளிநீக்குஇந்த கவிதையில் நான் அப்படியே நேரெதிரானவன்.
நிச்சயமாகத் தட்டில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்தியிருக்க மாட்டீர்கள். அதைக் கால் வீங்கிக்கிடந்த பிச்சைக்காரனுக்க்த் தானம் செய்திருப்பீர்கள்.
நீக்குநன்றி நண்பரே.
அருமை
பதிலளிநீக்குநன்றி பாரதி.
நீக்குநிஜத்தைச் சொல்லும் கவிதை.... இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்.. லாபம் கிடைக்கும் அல்லது ஏதோ எதிர்ப்பார்ப்போடுதான் எதையும் தானம் செய்கிறார்கள்...
பதிலளிநீக்குநான் படிச்சு என் மனதில் நின்ற ஒரு கோட்...
“பிச்சை போடுவது கூட, நமக்குப் புண்ணியம் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பினாலேதான்”...
உண்மைதான். பிச்சைக்காரன் பசியாறட்டும் என்று நினைத்துப் பிச்சை போடுபவர்கள் மிக மிக அரிது.
நீக்குநன்றி அதிரா.