எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

தேர்தல் பரப்புரையில் மோடி சொன்னதும் சொல்ல மறந்ததும்!!

2024 தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான நரேந்திர மோடி, அதி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அவர் பேச்சு கிஞ்சித்தும் பொய் கலவாதது.

உண்மை மட்டுமே பேசுகிற அவர், சில நேரங்களில் உண்மைகளில் சிலவற்றைச் சொல்லிவிட்டு, சிலவற்றைச் சொல்ல மறந்துவிடுகிறார்.

சொன்னவற்றிற்கும் சொல்ல மறந்தனவற்றிற்கும் ஒரு சின்னஞ்சிறு[2 மட்டும்] பட்டியல்:

*இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது” -இது அவர் சொன்னது. https://www.dinamani.com/india/2024/Apr/07/we-have-achieved-in-10-years-what-could-not-be-done-in-60-years-after-independence-pm-modi

“முழுக்க முழுக்க ஒரு இதிகாசக் கற்பனைப் பாத்திரமான ராமனுக்குக் கோடி கோடி கோடி ருபாய் செலவில் கோயில் கட்டியது முட்டாள்தனம். என்னைப் போல் ஒரு முட்டாள்தனத்தைச் செய்யத் தவறிய[பிரதிஷ்டையில் கலந்துகொள்ளாதது] பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளர்கள் ‘இந்தியக் கூட்டணியினர்’ என்பதை மறந்துவிடாதீர்கள்[அவர்களுக்கே வாக்களிக்கச் சொல்கிறார்] என்பது அவர் சொல்ல மறந்தது.

*“2014ஆம் ஆண்டுக்கு முன்பு... நாட்டின் சாமானிய மக்களில் பலர் குடிசை வீடுகளில் இருந்தனர், அல்லது வீடில்லாமல் இருந்தனர். ஏழைகள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தனர். ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனில் இடைத்தரகர்கள் பயனடைந்தனர். ஏழையின் மகனும், ஏழைகளின் சேவகனுமான நான் வறுமையில் வாழ்ந்திருக்கிறேன். நான் ஏழை மகன்; ஏழைகளின் சேவகன்...” -இது அவர் சொன்னது. https://www.hindutamil.in/news/india/1227268-cannot-forget-situation-of-country-before-2014-says-pm-modi.html

“இப்போது நான் ஏழையல்ல. ஆயிரக்கணக்கான ரூபாய் விலையில் தினம் தினம் ஆடை உடுக்கும் பணக்காரன். நான் இப்போது ஏழையின் மகனும் அல்ல; அம்பானி, அதானி போன்ற சில கோடீஸ்வரர்கள் என் மிக நெருங்கிய கூட்டாளிகள், அதாவது நண்பர்கள்” -என்பது அவர் சொல்ல மறந்தது.

* * * * *

மறவாதீர்! உண்மையே பேசும் மோடிக்கும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கும் மட்டுமே தேர்தலில்[2024] வாக்களியுங்கள்!