சனி, 6 ஏப்ரல், 2024

காமம் வேறு எதனையும்விட வலிமையானது; இழிவானதும்கூட!?!

ணமான பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகம் என்பார்கள். குறிப்பாக அந்தரங்கச் சுகம் குறித்த ஆசையை அத்தனை எளிதில் வெளிப்படுத்தமாட்டார்கள்[இளசுகள் விதிவிலக்கு?].

இத்தகைய மனப்பக்குவம் அவர்களுக்கு வாய்த்ததற்கான காரணங்கள் பல உள்ளன.

அவற்றில் முக்கியமானவை:

*பிள்ளைகள் மீதான பாசமும், அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கான பொறுப்புணர்வும் அவர்களுக்குள்ள ‘அது’ குறித்த சபலத்தை வெகுவாகக் குறைக்கிறது.

*‘வாய்க்கும் அரைகுறை உடலுறவுச் சுகத்திலேயே திருப்தியடைந்து வாழ்ந்து முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்னும் அனுபவ அறிவு.

*கடல் அளவு காமம் பெருகினாலும், அதைத் தணிவிக்க ஆணைத் தேடி அலைவதைத் தவிர்க்கும் இயல்பாய் அமைந்த குணம்[பிற உயிரினங்களிலும் ஆணைத் தேடிப் பெண் செல்வதில்லை, மிகப் பெரும்பாலும் என்பது அறியத்தக்கது].

இவை தவிர, அவர்களின் மனக் கட்டுப்பாட்டுக்கான வேறு சில காரணங்களும் உள்ளன.

காரணங்கள் பல இருப்பினும்.....

அண்மைக் காலங்களில், கணவன் இருக்க, உடலுறவுச் சுகத்துக்கு ஒருவனைத் தேடிக்கொள்வதும், அவனுடன் ஓடிப்போவதும், இடையூறாக இருந்தால் மணவாளனாயினும், பெற்ற பிள்ளைகளாயினும் ஈவிரக்கமின்றிக் கொலை செய்வதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.

கொலை செய்ய மனசாட்சி இடம் தராதபோதும், தக்க சூழ்நிலை வாய்க்காதபோதும் தற்கொலை புரிவது[ம்] அவ்வப்போதைய நிகழ்வாக உள்ளது.

இவ்வகைப் பெண்களில், முதலிரவில் அது விசயத்தில் ஏமாற்றம் கண்ட இளம் பெண்கள் மட்டுமல்ல, சிலவோ பலவோ பிள்ளைகளைப் பெற்றவர்களும், நடுத்தர வயதைக் கடந்தவர்களும் அடங்குவர்.

பெண் குலத்தவரிடம் நேர்ந்துள்ள மேற்கண்ட விபரீத மாற்றங்களுக்கான காரணம் என்ன?

*காலங்காலமாய் இவர்களை அடக்கி ஒடுக்கித் தன் கட்டுக்குள் வைத்திருந்த ஆண் இனம், பெண்ணுரிமை போற்றுவதாக எண்ணிக் கட்டுப்பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதா?

*அறிவியல் வளர்ச்சியால், புற்றீசலாய்ப் பெருகிவிட்ட ஆபாச இணையதளங்களுக்குப் பெண்களும் அடிமைகளானதால் இயல்பான குணம்[கட்டுப்படுத்துதல்] மாறிப்போனதா?

ஆணைப் போல எளிதில் தணியப் பெறாத இயல்பான காம இச்சையா?

மேற்கண்டவை அனைத்தையும் பெண்களின் குண மாற்றங்களுக்கான காரணங்களாகக் கருதி, முன்பு போற்றுதலுக்கு உள்ளாகியிருந்த பெண்ணினம், இப்போது தூற்றுதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று சொல்வது சரியல்ல.

மாற்றங்களுக்கான உண்மைக் காரணம்.....

காமம் என்பது வேறு எதனைவிடவும் மிக மிக மிக வலிமையானது. ஆணோ பெண்ணோ வாழும் சூழலைப் பொருத்து அதன் தாக்குதலுக்கு உள்ளாவதும், சிறிய அளவிலோ பெருமளவிலோ அழிவை நேர்கொள்வதும் எளிதில் தவிர்க்க இயலாது.

இதை இயற்கை நியதி எனலாம்.

இறைவன்[இருந்தால்] வகுத்த நெறி என்றும் சொல்லலாம்.

* * * * *

இப்பதிவை எழுதிடத் தூண்டுதலாக அமைந்தது கீழ்க்காணும் ஊடகச் செய்தி:

த்தரப் பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த 34 வயதுப் பெண்.

3 குழந்தைகளுக்குத் தாயான அவள் கணவனுடனான சச்சரவு காரணமாக, வீட்டிற்கு அருகிலிருக்கும் மின்மாற்றி[ட்ரன்ஸ்பார்மர்]யில் ஏறித் தற்கொலைக்கு முயல மக்களின் தலையீட்டில், தீயணைப்புத் துறையினரால் காப்பாற்றப்பட்டிருக்கிறாள் என்பது செய்தி.

இதற்கான வாசகரின் விமர்சனம்:

தீயணைப்புத் துறையினர் தாமதமாக வந்திருப்பார்களேயானால், இவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பாரா? அல்லது, தீயணைப்பாளர்கள் வரும்வரை[தன் கள்ள உறவுக்கான கணவனின் தலையீட்டைத் தடுத்துநிறுத்த] தற்கொலைக்கு முயல்வதுபோல் போக்குக்காட்டியிருப்பாரா?

                                *   *   *   *   *

https://www.nakkheeran.in/24-by-7-news/india/disappointing-results-deny-wifes-strange-request-extramarital-affair