*புதிய செல்களின் வளர்ச்சி:
BDNF(மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி) என்ற புரதத்தின் உற்பத்தியை உடற்பயிற்சி அதிகரிக்கிறது, இது மூளைச் செல்களுக்கு உரமாக அமைகிறது.
*ஆரோக்கியமான மனநிலை:
உடற்பயிற்சி செய்யும்போது, மூளை எண்டோர்பின்கள், செரோடோனின் மற்றும் டோபமைன் உள்ளிட்ட நல்ல இரசாயனங்களின் காக்டெய்லை வெளியிடுகிறது. இவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், பதட்டத்தைத் தணிக்கவும், பயன்படுகின்றன.
*நினைவாற்றல் அதிகரிப்பு:
உடற்பயிற்சி மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நினைவாற்றல் விரிவடைகிறது. ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுகிற ஞாபக மறது நோய் உருவானால், அதை வளரவிடாமல் தடுக்கிறது உடற்பயிற்சி.
*கவனச் சிதறல் தவிர்ப்பு:
முக்கியமான பணிகளின்போது மனம் அலைபாய்வதைத் தடுப்பதற்கான அரிய சாதனம் உடற்பயிற்சியே.
*மூளையின் இளமைத்தன்மை:
வயதாகும்போது ஏற்படும் மூளையின் இயற்கையான சுருக்கத்தை மெதுவாக்குவற்கு உதவுகிறது உடற்பயிற்சி.
*விரிவடையும் படைப்பாற்றல்:
உடற்பயிற்சி காரணமாக உடல் முழுதும் அதிகரிக்கும் ரத்த ஓட்டமும், சிந்திக்கும் ஆற்றலை வலுப்படுத்துவதற்கான ரசாயன உற்பத்தியும் படைப்பாற்றலை மேம்படுத்துகின்றன.
*நரம்பு இணைப்புகள் உருவாதல்:
புதிய நரம்பியல் இணைப்புகள் உருவாவதற்கு[நியூரோபிளாஸ்டிசிட்டி] உடற்பயிற்சி உதவுகிறது. இது புதியனவற்றை விரைவாகக் கற்றுக்கொள்ளவும், மூளைக் காயங்களிலிருந்து விரைவாக மீளவும், எதிர்மறைச் சிந்தனை வடிவங்களை மாற்றவும் உதவுகிறது.
*உடல் வலி தணிதல்:
உடற்பயிற்சி மிகக் கடினமான உடல் வலியைத் தணிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு வலி நீங்கி மனதில் அமைதி நிலவுகிறது.
*நல்ல உறக்கம்:
உடற்பயிற்சி அடினோசின் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துகிறது; உடல் வெப்பநிலையைச் சீராக்குகிறது.
*மூளையின் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிப்பு;
உடற்பயிற்சி சிந்திக்கும் ஆற்றலை அதிகரிப்பதோடு மறதி நோய்[டிமென்ஷியா] அபாயத்தைக் குறைக்கிறது.
*நிர்வாகத் திறன் மேம்படுதல்:
விரைந்து முடிவெடுத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற நிர்வகித்தலுக்கான திறன்களைப் பெற்றிட உதவுகிறது உடற்பயிற்சி.
இவை தவிர மேலும் பல நன்மைகள் உடற்பயிற்சியால் விளைகின்றன என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
* * * * *
***மிக விரிவானதும் துல்லியமானதும் ஆன தகவல்களுக்குக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.
15 Surprising Things That Happen to Your Brain During Exercise