திங்கள், 21 அக்டோபர், 2024

கற்பனைக்கெட்டாத கஞ்சா ஜக்கியின் அடாவடித்தனம்!!!

கீழ்வரும் செய்தி வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வாசிக்க நேர்ந்தபோது கடும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

//ஈஷாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஜக்கியின் பாதத்தைப் புகைப்படம் எடுத்து அதை விற்பனைக்கு வைத்துள்ளனர். அதற்கு ரூ.3.200 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்தப் படத்துக்கான விளக்கத்தில், “குருவின் பாதங்கள் போற்றப்படுகின்றன. ஏனெனில் அவை குருவின் ஆற்றலை அணுகுவதற்கான பாதையாகும். குருவின் பாதம் பணிந்து வணங்குவது ஒருவரின் நெருக்கத்தை[?] மேம்படுத்துகிறது. மேலும், சத்குருவுடன் ஆழமான தொடர்பையும் உருவாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது//

தமிழர்களில், இவனை அபிரிதமான சக்தி பெற்ற ஆன்மிகவாதி என்று நம்பும் முட்டாள்கள் நிறையவே உள்ளனர் என்பது உண்மை.

ஆனால், இவனின் கால் பாதப் புகைப்படத்தை ரூ 3200/= கொடுத்து வாங்கும் அளவிற்கு அடிமுட்டாள்கள் இருப்பதாக நினைத்து இப்படி விளம்பரம் செய்திருக்கிறானே, இதற்கான துணிச்சலை இவன் பெற்றது எப்படி?

பெற்றிடக் காரணமானவர் யார்? யாரெல்லாம்?

இந்த அதி அக்கிரமச் செயல் செய்த இவன் தண்டிக்கப்படுவதற்கு முன்னால், அந்த யாரோ அல்லது, யாரெல்லாமோ தண்டிக்கப்படுவது மிக முக்கியம்.

அந்த அவரை அல்லது அவர்களை அடையாளம் கண்டு நம் மக்கள் தண்டிப்பார்களா?

எப்போது? எப்படி?

                                       *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/isha-founder-jaggi-vasudev-feet-photo-for-sale-social-media-sparks-643337.html